நுவரெலியா மாம்பழ உறுப்பினர் மீது தாக்குதல்!

நுவரெலியா மாவட்டத்தில் சுயேட்சை குழு 02ல் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடும் கனகரத்தினம் ராஜா இனந்தெரியாதவர்களினால் தாக்கப்பட்டு பொகவந்தலாவ வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தாக்குதல் சம்பவம் நேற்று (25)சனிகிழமை இரவு
08.30 மணியளவில் ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் சென்ஜோன்டிலரி பகுதியில் வைத்து இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதே வேளை தாக்குதல் நடத்திய 05பேர் கொண்ட குழு முகத்தை முடிய நிலையில் தடிகளை கொண்டு தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளதாக காயங்களுக்கு உள்ளான வேட்பாளர் கனகரத்தினம் ராஜா தெரிவித்தார்.

குறித்த வேட்பாளர் பொகவந்தலாவ கொட்டியாகலை சீனாகலை போன்ற பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு டிக்கோயாபகுதிக்கு முச்சக்கர வண்டியில் பொகவந்தலாவ கெம்பியன் பகுதியில் சென்று கொண்டிருந்த வேளை
சென்ஜோன் டிலரி பகுதியில் வைத்து முச்சக்கர வண்டி மீது கல்வீச்சு மேற்கொள்ளபட்டபோது, முச்சக்கர வண்டியினை நிறுத்திய போது தேயிலை மலையில் பதுங்கி இருந்தவர்கள் தடியோடு வந்து குறித்த வேட்பாளரை கடுமையாக தாக்கியுள்ளதாகவும் தாக்குதலுக்கு உள்ளான வேட்பாளர் ராஜவிற்கு நெற்றியில் காயம் ஏற்பட்டுள்ளதோடு வலது கை நரம்பு முறிவுகள் எதுவும்
ஏற்பட்டிருக்கலாமென வைத்தியர்கள் சந்தேகிப்பதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தாக்குதலை மேற்கொண்ட குழுவினருடை கையடக்க தொலைபேசி ஒன்றையும் தாக்குதலுக்கு உள்ளான வேட்பாளர் ராஜா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் குறித்த தொலைபேசியில் பற்றரி மற்றும் சிம் அட்டை இருக்கவில்லையெனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தாக்குதலை மேற்கொண்டவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை நேற்று முன்தினம் வேட்பாளர் கனகரத்தினம் ராஜாவுடை கையடக்க தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பு ஒன்றினை ஏற்படுத்தி உயிர் அச்சுறுத்தல் விடுத்ததாகவும் இது தொடர்பில் பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here