வெளியேறினார் மொஹமட்: சர்ச்சை தீர்ந்தது!

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்திற்கு மட்டும், தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரிகளில் ஒருவரான ஓய்வபெற்ற பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட், அந்த பணியிலிருந்த ஒதுங்கியுள்ளார்.

இதையடுத்து, 2015ஆம் ஆண்டு தேர்தல் குறித்து அச்சம் வெளியிட்ட அரசியல் கட்சிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளன.

நேற்று முன்தினம் (24) வடக்கு முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் மொஹமட் விவகாரத்தை வெளிப்படையாக பேசியிருந்தார். தமிழ் அரசியல் வட்டாரத்தில் பகிரங்கப்படுத்தப்படாமல், உள்சுற்றில் மட்டும் 2015 தேர்தல் முடிவு சர்ச்சை உலாவி வந்த நிலையில், அதை விக்னேஸ்வரன் பகிரங்கப்படுத்தினார்.

அப்போது, கடமையிலிருந்த அதிகாரிகள் தற்போதும் மேலதிக நியமனமாக எதற்காக நியமிக்கப்பட வேண்டுமென்றும் கேள்வியெழுப்பியிருந்தார். அத்துடன், இரண்டு சர்ச்சைக்குரிய நியமனங்கள் குறித்து, தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தயாராகி வந்தது.

இந்த நிலையில், மொஹமட் தனது விசேட கடமையிலிருந்து ஒதுங்குவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here