தட்டுப்பாட்டின் எதிரொலி: கஞ்சா கடத்தல் வலையமைப்பு மஞ்சள் கடத்தல்காரர்களாக மாற்றம்!

தமிழகத்தின் மண்டபம் பொலிசாரால் கைப்பற்றப்பட்ட, இலங்கைக்கு கடத்தப்படவிருந்த மஞ்சள்

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்துவதில் ஈடுபட்ட கும்பல்கள் தற்போது மஞ்சள் கடத்தலில் கவனம் செலுத்துவதாக பொலிஸ் வட்டாரங்க் தெரிவிக்கின்றன. அண்மை நாட்களாக, இலங்கைக்கு மஞ்சள் கடத்த தயாரான பலரை தமிழக காவல்த்துறை கைது செய்துள்ளது.

இலங்கையில் மஞ்சள் பற்றாக்குறை நிலவுகிறது. அந்நிய செலாவணியை மிச்சப்படுத்தவும் உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கவும் இந்த ஆண்டு தொடக்கத்தில் மஞ்சள் இறக்குமதியை அரசாங்கம் தடை செய்தது.

இதையடுத்து மஞ்சளின் விலை அதிகரித்துள்ளது. கையிருப்பில் உள்ள மஞ்சளை பதுக்கி வைத்ததுடன், கலப்படத்திலும் சில வியாபாரிகள் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர்களை தேடி தொடர் சுற்றிவளைப்புக்கள் நடந்து வருகிறது.

மஞ்சள் இறக்குமதி தடை செய்யப்பட்டதும், சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக  மஞ்சள் கொண்டுவருவதில் பல குழுக்கள் ஈடுபட ஆரம்பித்துள்ளன. கடந்த புதன்கிழமை இந்தியாவின் இராமமேஸ்வரம் கடற்கரையில் 600 கிலோ மஞ்சளுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மஞ்சள் பயிர் அறுவடைக்கு 9 மாதங்கள் தேவை. இலங்கையில் மஞ்சள் போதுமானளவு உற்பத்தி செய்யப்படாமையினாலேயே தற்போது மஞ்சள் தட்டுப்பாடு நிலவுகிறது. இலங்கையின் மஞ்சள் தேவையை ஈடுசெய்ய, பெருமளவில் இந்தியாவை நம்பியே இருக்கிறோம்.

5 பேர் கொண்ட இலங்கை குடும்பமொன்று ஆண்டக்கு சராசரியாக 2.5 கிலோ மஞ்சளை பாவிப்பதாக ஏற்றுமதி வேளாண்மைத் துறை (ஈஏடி) மதிப்பிடுகிறது. இதன்படி, மொத்த தேசிய தேவை 6,800 மெட்ரிக் தொன். ஆண்டுதோறும், உள்ளூர் பண்ணைகள் 10,000 மெட்ரிக் தொன் புதிய மஞ்சளை விளைவிக்கின்றன. ஆனால், இது பதப்படுத்திய பின் 2,000 மெட்ரிக் தொன்களாக சுருங்குகிறது.

மேலதிக தேவைக்கு இந்தியாவிலிருந்து மஞ்சள் இறக்குமதி செய்யப்படுகிறது.

தற்போது மஞ்சள் தட்டுப்பாடு நிலவுவதால், இலங்கைக்கு கஞ்சா கடத்தும் வலையமைப்பை சேர்ந்த தென்னிந்திய கடத்தல்காரர்கள், மஞ்சள் கடத்தலிலேயே அதிகம் ஈடுபடுவதாக குறிப்பிப்படுகிறது.

நாட்டுக்குள் கஞ்சாவை கொண்டுவர பல உத்திகளை பாவித்ததை போலவே, தற்போது மஞ்சளை கடத்திற்கு பல உபாயங்களை பாவிக்கிறார்கள். அண்மை நாட்களில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களிற்குள் மஞ்சளை இரகசியமாக மறைத்து வைத்து இறக்குமதி செய்ய ஆரம்பித்துள்ளனர். இப்படியான சுமார் 35 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தின் சுங்கப்பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

தற்போது வடக்கில் ஒரு கிலோ மஞ்சள் 2,500- 3,000 ரூபா வரை விற்பனையாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here