பிறப்பு சான்றிதழில் பெற்றோரின் விவாக நிலை, இனம் அகற்றப்படுகிறது!

பிறப்புச் சான்றிதழில் காணப்படும் பெற்றோர் விவாக நிலை மற்றும் இனம் ஆகிய விடயங்களை அகற்றுவதற்கு பதிவாளர் நாயகத் திணைக்களத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுளளது.

தாய், தந்தை விவாகம் செய்துகொண்டுள்ளனரா எனும் விடயம் உள்ளடக்கப்படுவதன் காரணமாக, பல சிறார்கள் முகங்கொடுக்கும் சமூகப் பிரச்சினைகளை கருத்திற்கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பதிவாளர் நாயகம் என்.சி.விதானகே தெரிவித்தார்.

மேலும், நாட்டிலுள்ள அனைத்துக் குடிமக்களுக்கும் புதிய பிறப்புச் சான்றிதழ்கள் அவர்கள் இலங்கையர்கள் என்று கூறி வழங்கப்படும்.

புதிய டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ்கள், எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு பின்னர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இணையத்தளம் ஊடாக பிறப்புச் சான்றிதழ்கள் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here