தேர்தல் முடியும் வரை விசாரணையை ஒத்திவைக்க கோரிக்கை!

முன்னாள் அமைச்சர்கள் ரிசாத் பதியுதின், ரவி கருணாநாயக்க ஆகியோர் மீதான விசாரணையை பொதுத்தேர்தல் முடியும் வரை ஒத்திவைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு, குற்றப்புலனாய்வுத்துறையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தேர்தலின் போது விசாரணைகள் தொடங்கப்படுகின்றன. அதற்கான காரணங்கள் குறித்து சந்தேகம் உள்ளது. எனவே வாக்கெடுப்பு முடியும் வரை விசாரணையை ஒத்திவைக்குமாறு ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் ரட்ணஜீவன் கூல் தெரிவித்துள்ளார்.

தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் நீண்டகாலம் விசாரணையில் இருந்த முக்கிய வழக்குகள் கைவிடப்பட்டுள்ளன. தேர்தல் செயன்முறையில் இந்த விசாரணைகளின் தலையீட்டை உணர்ந்து, தேர்தல் முடியும் வரை வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் ரிசாத் மீதான விசாரணையில் ஏன் திடீர் ஆர்வம் காட்டுகின்றனர்? தேர்தல் நடைபெற இன்னும் 2 வாரங்களே உள்ளவுள்ள நிலையில், 15 மாதங்களின் பின்னர் ஏன் இந்த விசாரணை தொடங்கப்படுகிறது? 15 மாதங்கள் காத்திருந்த பொலிாரால் ஏன் இன்னும் 2 வாரங்கள் காத்திருக்க முடியாது? என்றும் கேட்டார்.

ஜூலை 17ஆம் திகதி நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் ஆணைக்குழுவின் நிலைப்பாட்டை அனைவரும் வரவேற்றனர். தேர்தல் முடியும் வரை விசாரணையை ஒத்திவைக்கமாறு ஆணைக்குழு தலைவர், பதில் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளார் என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here