தமிழர்கள் தமிழர்களிற்கு வாக்களிக்க வேண்டும்!

எமது மண்ணை பாதுகாக்க வேண்டியதும், எமது மக்களை நாங்கள் சரியாக வழி நடத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த மண்ணை பறி கொடுக்காமல் எமது மண்ணை மீட்டெடுப்பதற்காக நீங்கள் உங்கள் வாக்கு உரிமையை சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என தமிழர் சமூக ஜனநாயாக கட்சியின் செயலாளர் நாயகமும் வேட்பாளருமான ப.உதயராசா தெரிவித்தார்.

மன்னார் பனங்கட்டுக்கோட்டு பகுதியில் இன்று காலை கட்சி அலுவலகத்தை திறந்து வைத்த பின் கட்சியின் மன்னார் மாவட்ட வேட்பாளர் கி.பாஸ்கர் ராஜ் அவர்களை ஆதரித்து உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

மன்னார் மாவட்டத்தை பொருத்தவரையில் இந்த மாவட்டம் எங்களை விட சிறுபான்மையினரால் இன்று பறிபோகும் நிலைமைக்கு மாறி இருக்கின்றது.

அதனை உண்மையில் தக்க வைத்த எங்களின் மறைமாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்களுக்கு நன்றி கூறக் கடமைப் பட்டிருக்கின்றோம்.

உண்மையில் நாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களினால் இந்த மண் காப்பாற்றப் படவில்லை.ஆனால் இந்த மண்னை முன்னாள் மறைமாவட்ட ஆயர் தான் காப்பாற்றியுள்ளார்.

ஆகவே அவர் இந்த சேவையில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.நாங்கள் இந்த வன்னி பெரும் நிலப்பரப்பை காப்பாற்ற வேண்டிய தேவைக்கு தள்ளப் பட்டிருக்கிறோம்.

இங்குள்ள பல நாடாளுமன்ற உறுப்பினர்களை வீட்டிற்கு அனுப்புவதற்காக மக்கள் முடிவெடுத்திருக்கிறார்கள். இந்த மண்ணை நாங்கள் பாதுகாக்க வேண்டியது, அல்லது எங்களின் மக்களை நாங்கள் சரியாக வழி நடத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

படித்த இளைஞர் யுவதிகள் தங்களுடைய தகமைக்கு ஏற்றவாறு வேலை வாய்ப்பு இல்லாததால் பலர் ஆடைத்தொழிற்சாலைக்கும், கூலி வேலைக்கும் செல்ல வேண்டிய நிலமை இங்கு ஏற்பட்டுள்ளது.

நாங்கள் அரசாங்கம் சார்பாக ஒரு நல்ல அமைச்சை உருவாக்காததால் இங்கு மாற்று இனத்தவர்கள் தாங்கள் அமைச்சுக்களை எடுத்து தங்கள் இனங்களை வளர்த்து அவர்களுக்கான வேலை வாய்ப்புகளைக் கொடுத்து எங்களின் இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பு இன்றி இந்த யுத்தத்தில் வெற்றி பெற்றது போன்று இந்த அரசாங்கம் இந்த இளைஞர்களுக்கு போதைக்கு அடிமையாக்கி வெற்றி பெற்றுள்ளது.

நாம் யாருக்கு வாக்களிப்பது என்று தெரியாத நிலைமை என்பது ஒரு இனத்தின் அழிவை அந்த அழிவின் உச்ச கட்டத்திற்கு நாங்கள் சென்று கொண்டிருக்கின்றோம்.

ஒரு சில தினங்களுக்கு முன் மன்னார் மாவட்டத்திற்கு மொட்டு சின்னத்தில் போட்டி போடக் கூடிய கொழும்பில் இருந்து இங்கு வந்த வேட்பாளரான ஜன கநந்தகுமார கூறியுள்ளார் பணம் இருந்தால் வன்னியில் என்னமும் செய்யலாம் என்று கூறியுள்ளார்.மன்னாரில் அவருக்கு பின்னால் வால் பிடிக்கின்ற இந்த மண்ணின் மகிந்தர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் என்னத்திற்காக இந்த யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது?

பல்லாயிரக்கணக்கான மாவீரர்கள் எதற்காக உருவாக்கப்பட்டார்கள்?தமிழர்களின் கலை,கலாச்சார விழுமியங்களை நாங்கள் எவ்வாறு கட்டிக்காப்பது என்பது தொடர்பில் நீங்கள் முதலில் புறிந்து கொள்ள வேண்டும்.

இன்று எங்களுடைய தமிழர்கள் சிலர் மாற்று இனத்தவர்களுக்கு செம்பு தூக்கிக் கொண்டு வாக்குப்பிச்சை கேட்கின்றனர். இந்த மண்ணை பறி கொடுக்காமல் எமது மண்ணை மீட்டெடுப்பதற்காக நீங்கள் உங்கள் வாக்கு உரிமையை சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

தமிழரின் வாக்கு தமிழனுக்காக இருக்க வேண்டும் என்ற மன நிலைக்கு வாரூங்கள் என அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here