இந்தியாவில் டிக்டாக் இப்பொழுது தடை செய்யப்பட்டுள்ளது.
டிக்டாக் பெரும்பாலும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாக மட்டுமே இருந்தது. டிக்டாக்கில் மூழ்கிய மனைவி கொலை, விவாகரத்து என்பது மாதிரியான நிறைய செய்திகள் தொடர்ந்து வந்தன. டிக்டாக் ஒரு போதையாக பலரை மயக்கி வைத்திருந்தது.
இந்தியாவில் டிக்டாக் தடைசெய்யப்பட முன்னர் நடந்த சம்பவம் இது.
டிக்டாக் வீடியோவை வெளியிடுவதால் பலர் சிக்கலை சந்திக்கிறார்கள். வீடியோ வெளியான பின்னர் குடும்பங்களிற்குள் சிக்கல் வருவதுண்டு.
ஆனால் பிரியா கோலானி என்ற டிக்டாக் பிரபலத்திற்கு, வீடியோ வெளியிடுவதற்கு முன்னரே “பின்னால்“ பெரிய பிரச்சனையாகி விட்டது. அவருக்கு 1.5 மில்லியன் பின்தொடர்பவர்கள் உள்ளனர்.
அவர் அண்மையில் நள்ளிரவில் ஒரு வீடியோவை உருவாக்க முயன்றார். கத்ரீனா கைஃப் தோன்றிய பாடலான “ஜாரா ஜாரா டச் மீ டச் மீ” பாடலிற்கு அவர் டிக்டாக் வீடியோ செய்ய முயன்றார். அப்போது பின்னால் வந்த தெருநாய் ஒன்று அவரது பின்பகுதியை பதம் பார்த்தது.
@priyagolani after editing ????????
பின்னர் தனது காயங்களிற்கு மருந்திடும் வீடியோவையும் அவர் வெளியிட்டார்.