வர்த்தகர் ஒருவரிடமிருந்து 15000 ரூபா இலஞ்சம் வாங்கியபோது பொலிஸ் அதிகாரியொருவர் கையும் மெய்யுமாக சிக்கியுள்ளார்.
வத்துருகமவை சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடம் இலஞ்சம் வாங்கிய யக்கல பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் பொறுப்பதிகாரியே கைதானார்.
நீதிமன்ற வழக்கொன்றில் வர்த்தகர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நீதிமன்றத்தின் அடுத்த வழக்கு விசாரணையில் பிணை நிபந்தனைகளை குறைப்பதாக தெரிவித்தே இலஞ்சம் வாங்கியுள்ளார்.