அமெரிக்க கடற்படையின் முன்னணி போர்க்கப்பலொன்றில் திடீர் வெடிப்ர் சம்பவம் நடந்துள்ளது. இதனால் கப்பல் தீப்பற்றி எரிந்தது.
சாண்டியாகோ துறைமகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த “போன்ஹோம் ரிச்சர்ட்” என்ற போர்க்கப்பலில் வெடிவிபத்து நடந்தது. இதில் குறைந்தது 18 கடற்படையினர் காயமடைந்துள்ளன்.
வெடிவிபத்தை தொடர்ந்த கப்பல் தீப்பற்றியது. இது பாரதூரமான தீ, பெரும் பிரயத்தனத்தின் பின் அணைக்கப்பட்டதாக, அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை காலையில் தீ விபத்து ஏற்பட்டது. வெடிப்பிற்கான காரணம் வெளியாகில்லை.
போன்ஹோம் ரிச்சர்ட் கப்பல் 255 மீட்டர் நீளம் கொண்டது.
US Navy vessel on fire in California
BREAKING: Several sailors are injured after a US Navy ship caught fire at Naval Base San Diego. https://bit.ly/32bVtCw
Slået op af Fox 32 Chicago i Søndag den 12. juli 2020
ஹெலிகொப்டர்களுக்கு இங்கு தரையிறங்கும் திறன் உள்ளது. இது அமெரிக்காவின் முன்னணி விநியோக மற்றும் போர்க்கப்பல்களில் ஒன்றாகும், துருப்புக்களை கொண்டு செல்வதுடன், வைத்தியசாலையும் அதனுள் உள்ளது.