இலங்கையில் நேற்று (10) அதிகூடிய எண்ணிக்கையாக 300 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கந்தக்காட்டிலுள்ள போதைப்பொருள் அடிமையானோர் புனர்வாழ்வு மையத்திலிருந்த 283 பேர், இந்தியாவிலிருந்து வந்த 09 பேர், பாகிஸ்தானிலிருந்து வந்த ஒருவர், டுபாயிலிருந்து வந்த 03 பேர், வெலிக்கடை சிறைச்சாலையிருந்த மற்றுமொரு கைதி, கந்தக்காடு தொற்றாளருடன் தொடர்பைப் பேணிய 03 பேர் ஆகிய 300 பேரே நேற்று அடையாளம் காணப்பட்டவர்களாவர்.
அடையாளம் காணப்பட்ட வெலிக்கடை சிறைச்சாலை கைதி, இலங்கையில் 2,078 ஆவது நபராக அடையாளம் காணப்பட்ட கைதியுடன் நெருங்கிய தொடர்பைப் பேணியவர் என, அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கடந்த மே 27ஆம் திகதி இலங்கையில் ஆகக் கூடுதலாக 150 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தனர். நேற்று, இதைவிட இரண்டு மடங்கானவர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
இதன்படி, இதுவரை இலங்கையில் 2,454 பேர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளனர். அத்துடன் நேற்று ஒருவர் குணமடைந்தார். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,980 ஆக அதிகரித்துள்ளது. கடற்படையை சேர்ந்தவரே குணமடைந்துள்ளார்.