தடுத்த பொலிசார்; மீறிய சிவாஜி: நெருக்கடிக்குள் நவாலி சென்.பீற்றர்ஸில் உணர்வுபூர்வ அஞ்சலி! (PHOTOS)

நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 25ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை தேவாலயத்தில் நினைவுகூரப்பட்டது.

சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் இன்று மாலை பங்குத்தந்தை தலைமையில் ஆராதனை வழிபாடுகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து தேவாலயத்திற்கு அருகில் அமைக்கப்பட்டு உள்ள நினைவுத் தூபியில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மலர் தூபி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபியில் அஞ்சலி செலுத்த பொலிஸார் தடைகளை ஏற்படுத்திய போதிலும் அதனையும் மீறி மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
1995ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 திகதியன்று நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்திலும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்கள் மீது விமானப் படையினரின் புக்கார விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை வீசியதில் 147 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இன்றைய தினம் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக தேவாலயத்திற்கு அருகில் நினைவு தூபி அமைக்கப்பட்டுள்ளது. அந்தத் தூபியில் அஞ்சலி செலுத்துவதற்காக பொலிஸார் தடை ஏற்படுத்தி இருந்தனர்.

பின்னர் அருட்தந்தையர்கள் மட்டும் சுடரேற்றி அஞ்சலி செலுத்த பொலிஸார் அனுமதித்தனர். அதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த பொலிசார் அனுமதிவில்லை.

அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்ட வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பொலிசாரின் தடைகளை மீறி சுடரேற்ற முற்பட்ட போது பொலிஸ் அதிகாரியொருவர் தடுத்தார். இருந்த போதிலும் அதனையும் மீறி சிவாஜிலிங்கம் நினைவு தூபியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார். இதனால் குழப்பம் ஏற்பட்டது.

தொடர்ந்து பொலிஸாரின் தடைகளை மீறி பொதுமக்கள் நினைவு தூபியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here