நவாலி படுகொலை நினைவேந்தலை தடுக்க முயற்சி: சிவாஜிக்கு நீதிமன்றம் அழைப்பாணை!

மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் (9) நவாலி படுகொலை நினைவேந்தல் நாள். இதை முன்னிட்டு நவாலியில் சிவாஜிலிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளதாகவும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைளை சீர்குலைக்கும் விதமான பெருமளவானவர்களை அழைத்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு, மானிப்பாய் பொலிசாரால் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வை நடத்த தடைவிதிக்க வேண்டுமென்றும் கோரப்பட்டது.

எனினும், தடைவிதிக்காத நீதிமன்றம், இந்த விடயத்தில் சிவாஜிலிங்கம் தரப்பின் நிலைப்பாட்டை விளக்கமளிக்க, நாளை நண்பகல் 12 மணிக்கு நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here