முகக்கவசம் அணிய மறுத்த பிரேஸில் ஜனாதிபதிக்கும் கொரோனா!

பிரேசில் ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கொரொனா தொற்றிற்குள்ளாகிய சந்தேகத்தில் பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ இன்று இரண்டாவது முறையாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதன்போது அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

கொரொனா தொற்றை ஆரம்பத்தில் அலட்சியமாக எதிர்கொண்ட போல்சனாரோ, முகக்கவசத்தையும் அணிய மறுத்திருந்தார். அவரது நடவடிக்கையால் பிரேசிலில் அதிக இழப்பு ஏற்பட்டது என்ற விமர்சனமுள்ளது.

அவர் முகக்கவசம் அணியாமல் நடமாடினால் அபராதம் விதிக்கப்படுமென நீதிமன்றம் எச்சரித்த பின்னரே முகக்கவசம் அணிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரேசிலில் இதவரை 65,000 இற்கும் அதிகமானவர்கள் தொற்றால் உயிரிழந்துள்ளனர். 1.6 மில்லியனிற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here