100,000 ரூபாய்க்கு 9,000 ரூபா கொமிசன்: போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பிலிருந்த வங்கி அதிகாரி கைது!

போதைப்பொருள் வர்த்தக வலையமைப்புடன் இயங்கி வந்த வங்கி அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெரஹெர பகுதியிலுள்ள ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தை, கடத்தல்காரர்கள் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளதாகவும், அந்த பணத்தை அவரது தனிப்பட்ட வங்கிக் கணக்கில் வைப்பு செய்துள்ளதாகவும் மேற்கு மாகாணத்திற்கு பொறுப்பான மூத்த பிரதிப்பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

இந்த ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியுடன் 10 போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் வர்த்தகர்கள் வழங்கும் பணத்தை தனது வங்கியில் வைப்பிலிட்டு வைத்திருந்து விட்டு, பணத்தை வேறு வங்கிக் கணக்கிற்கு மாற்றும் போது, ஒவ்வொரு 1 இலட்சம் ரூபாவிற்கு அவர் 9,000 ரூபா அறவிட்டுள்ளார்.

ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி ஒரு மாத காலத்தில் 6.5 மில்லியன் போதைப்பொருள் வர்த்தகர்களின் பணத்தை வைப்பிலிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

அந்த நபரின் மடிக்கணினி மற்றும் பல ஆவணங்களையும்பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here