அடிக்கடி உல்லாசத்திற்கு அழைத்ததால் கணவனுடன் சேர்ந்து கள்ளக்காதலனை ‘முடித்த’ பெண் கைது!

உல்லாசத்துக்கு அடிக்கடி அழைத்து தொந்தரவு செய்த கள்ளக்காதலனை கணவனுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார் கள்ளக்காதலி.

திருவொற்றியூரில் நள்ளிரவு நேரம் இந்த அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சென்னை எர்ணாவூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ராஜா (45). இவர், அங்குள்ள மாட்டுமந்தை மேம்பாலத்தின் கீழ் தங்கியிருந்துள்ளார். அங்கு குடும்பத்துடன் ஹாஜிதாவும் (29) தங்கியிருந்துள்ளார். அப்போது, ராஜாவுக்கும், ஹாஜிதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது.

இவர்கள் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில், ராஜாவுக்கும் ஹாஜிதாவுக்கும் இடையே உள்ள பழக்கம் கணவர் அப்துல் கரீமுக்கு (35) தெரிந்துள்ளது. இதனை மனைவி ஹாஜிதாவிடம் கரீம் கேட்டபோது தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தவறான பழக்கத்தை கைவிடும்படி மனைவியிடம், கரீம் கூறியுள்ளார்.

கணவனின் பேச்சைக் கேட்டு ராஜாவுடனான கள்ளத் தொடர்பை ஹாஜிதா விட்டுவிட்டார்.

ஆனால், ராஜாவினால், ஹாஜிதாவை மறக்க முயடிவில்லை. தன்னுடன் உல்லாசமாக இருக்க வேண்டுமென தொந்தரவு செய்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் ராஜாவின் தொந்தரவை தாங்க முடியாமல் ஹாஜிதா, தனது கணவர் கரீமுவிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கரீம், ராஜாவிடம் இது குறித்து தட்டிக் கேட்டுள்ளார். அப்போது, இருவருக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
“நீ உன் மனைவியை கண்டித்துக் கொள். தேவையில்லாமல் என்னிடம் பிரச்னை செய்யாதே. உன்னை தீர்த்துக் கட்டிவிடுவேன்” என்று ராஜா கூறியுள்ளார்.

இதனால், அங்கிருந்து சென்ற கரீம், ராஜாவை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார். தனது நண்பனிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.

இதனால் இருவரும் சேர்ந்து ராஜாவை நள்ளிரவில் ஆட்டோவில் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது, கரீம், “என் மனைவி நீ தொந்தரவு செய்வதை நிறுத்திவிடு” என்று எச்சரித்துள்ளார். அப்போது, நடந்த தகராறில் ராஜாவை ஆட்டோவுக்குள் வைத்து இரண்டு பேரும் கொலை செய்தனர்.

திருவொற்றியூர் காவல்துறையினர் ராஜாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்காக அனுப்பி வைத்தனர்.

கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அப்துல்கரீம், கரிமுல்லா மற்றும் ஹாஜிதா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here