திருமணமாகாத பெண்ணின் வீட்டிலிருந்த இரகசிய அறை… பதுக்கி வைக்கப்பட்டிருந்த பயங்கர ஆயுதங்கள்!

ஹோமாகம, பிட்டிபன வடக்கு பகுதியில் பாதாள உலகக்குழுவிற்கு சொந்தமான பெருந்தொகை ஆயுதங்கள் கைப்பற்ற விவகாரத்தின் தொடர்ச்சியாக, நேற்றும் வீடொன்றிலிருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

4 வது அவென்யூ பகுதியிலுள்ள வீடொன்றில், நேற்று அரச புலனாய்வுத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அந்த வீட்டிலுள்ள பெண்ணை சுமார் 5 மணித்தியாலங்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதன்போது, வீட்டில் இரகசிய அறையொன்றில் இருந்து ஒரு ராப்பரின் ஆயுதம் கண்டுபிடிக்கப்பட்டது. நான்கு தோட்டாக்கள், 7.7 மிமீ தோட்டாக்கள், 7 கையெறி குண்டுகள், இரண்டு புல்லட் ப்ரூஃப் ஆடை மற்றும் 04 அடையாளம் தெரியாத தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.

ஹோமகமவில் ஜூன் 29 அன்று வர்த்தக நிலையமொன்றில் துப்பாக்கி மீட்கப்பட்டதுடன், வர்த்தக நிலைய உரிமையாளர் அவரது மனைவி, பணியாளர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

வர்த்தக நிலைய உரிமையாளருடன் தொடர்பை பேணிய பெண்ணொருவரின் இல்லத்திலேயே நேற்று சோதனை நடத்தப்பட்டது.

அவர் 2013 ஆம் ஆண்டில் 50 மில்லியன் ரூபாவிற்கு வீட்டை வாங்கி அந்த பெண்ணை குடியேற்றினார். திருமணமாகாத அந்த பெண், தனது சகோதரியின் 2 பிள்ளைகளுடன் அங்கு குடியிருந்தார்.

வீட்டிலிருந்த ஆயுதங்கள் பற்றி தனக்கு எதுவும் தெரியாதென பெண் தெரிவித்துள்ளார்.

அந்த பெண்ணிற்கு வீடு வழங்கப்படுவதற்கு முன்னரே ஆயுதங்கள் அங்கு மறைத்து வைக்கப்பட்டதா என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அந்த பெண் கைது செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here