இந்தவார ராசி பலன்கள் (30.11.2020- 6.12.2020)

சந்திரன், சுக்கிரன், புதன் சாதக நிலையில் உள்ளனர். விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.
அசுவினி: வியாபாரிகள் ஓரளவு வளர்ச்சி காண்பார்கள். குடும்பத்தில் சிறு சிறு குழப்பங்கள் தோன்றி மறையலாம். சுபநிகழ்ச்சிகள் பெரியோர்களின் தலையீட்டால் நல்லவிதமாக முடியும்.
பரணி: வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். திட்டமிட்ட விஷயத்தை முடிப்பதில் தடை ஏற்பட்டாலும் நல்லபடியாகச் செய்து முடிப்பீர்கள். பெண்கள் பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வர்.
கார்த்திகை 1: செய்யும் பணியில் உயர்வான நிலை ஏற்படும். பிறரது பாராட்டுதல் மகிழ்ச்சி தருவதாக அமையும். பணியாளர்கள் சிலர் மாற்றல் கிடைத்து குடும்பத்தோடு சேருவார்கள்.

புதன், சுக்கிரன், செவ்வாயால் நற்பலன் உண்டு. அனுமன் வழிபாடு வெற்றி தரும்.
கார்த்திகை 2,3,4: அரசியல்வாதிகளுக்கு பெயர், புகழ் யாவும் தேடிவரும். உங்கள் பேச்சிற்கு மதிப்பு கூடும். பணியாளர்கள் அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். பண வரவுக்கு பஞ்சம் இருக்காது.
ரோகிணி: மகிழ்ச்சி உண்டாகும். சுபநிகழ்ச்சி பற்றிய முயற்சிகள் நல்லபடியாக முடியும். மேலதிகாரியின் ஆதரவைப்பெற கூடுதலாக பணிபுரிந்தாலும் பலன் உண்டு. நண்பர்களுக்கு உதவி செய்வீர்கள்.
மிருகசீரிடம் 1,2: வெளியூர் சென்று பணிபுரிய விரும்புவோரின் எண்ணம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நற்செய்தி காத்திருக்கிறது. பெண்கள் குடும்ப நலனில் அக்கறை கொள்வர்.

ராகு, கேது, சுக்கிரன் நன்மைகளை வழங்குவர். குருவாயூரப்பன் வழிபாடு கவலை தீர்க்கும்.
மிருகசீரிடம் 3,4: முன்னேற்றம் பற்றிய சிந்தனைகள் உதயமாகும். இது பிற்கால நன்மைக்கு வழிவகுக்கும். பெண்களுக்கு மிகச் சிறந்த வாரம். வியாபாரிகளின் முயற்சிகள் லாபம் தருவதாக அமையும்.
திருவாதிரை: பதவி உயர்வை பெறுவதற்கான சூழல் உருவாகும். சகஊழியர்களால் ஏற்பட்ட மனக்குழப்பம் விலகும். தொழில், வியாபாரம் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும். சேமிப்பு கைகொடுக்கும்.
புனர்பூசம் 1,2,3: பணியில் மேன்மை உருவாகும். தடைபட்ட திருமணம், தொழில் அபிவிருத்தி போன்றவை நல்லவிதமாக முடியும். உத்யோகஸ்தர்கள் தங்கள் வேலையில் கவனமாக இருப்பது நல்லது.

குரு, சுக்கிரன், சந்திரன் அனுகூல பலனை தருவர். முருகன் வழிபாடு நம்பிக்கை வளர்க்கும்.
புனர்பூசம் 4: எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் கைகூடும். வியாபாரத்தை பெருக்க கூடுதல் முயற்சி தேவைப்படும். நண்பர்களுடன் பழைய நினைவுகளை பேசி மகிழ்வீர்கள்.
பூசம்: வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். இடமாற்றம் சம்பந்தமான முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கி நிம்மதி கிடைக்கும். மனதில் நம்பிக்கை கூடும்.
ஆயில்யம்: ஜீரணம் சம்பந்தமான பிரச்னைகள் இருக்கக்கூடும். புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சி தள்ளி போகலாம். பயணத்தின் போது பொருட்களின் பாதுகாப்பில் கவனம் தேவை. பணிச்சுமை குறையும்.

செவ்வாய், புதன், சூரியன் அதிர்ஷ்டகரமான பலன்களை தருவர். சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.
மகம்: குடும்பத்தில் அவ்வப்போது ஏற்படும் பிரச்னைகளை சமாளிப்பீர்கள். மருத்துவ செலவுகள் நேரலாம். முயற்சிகளில் பெரும்பாலானவை வெற்றி பெறும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் மகிழ்ச்சி காண்பீர்கள்.
பூரம்: திருமணம் நடக்கப்பெறும். குழந்தை பாக்கியம் சிலருக்கு உண்டாகும். தந்தை வழி உறவினர் மூலம் நன்மைகள் நடக்கும். பெற்றோரின் ஆலோசனை கிடைப்பதால் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள்.
உத்திரம் 1: சுபநிகழ்ச்சிகளுக்கு திட்டமிடுவீர்கள். எதிர்காலம் பற்றிய பயம் தோன்றும். காதல் சம்பந்தமான விஷயத்தில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடக்கும். பள்ளி, கல்லுாரி நண்பர்களால் சிறு சந்தோஷம் ஏற்படும்.

குரு, சுக்கிரன், புதன் அனுகூல அமர்வில் உள்ளனர். சூரியன் வழிபாடு வளம் தரும்.
உத்திரம் 2,3,4: குடும்பத்தினர், நண்பர்கள் மூலம் நன்மைகள் பெறக்கூடிய சிறந்த வாரமாகும். பணியாளர்கள் அதிகாரம் உள்ள பதவியில் அமர்வீர்கள். கணவன், மனைவி இடையே ஒற்றுமை நன்றாக இருக்கும்.
அஸ்தம்: உதவிகளும், நன்மைகளும் செய்து பாராட்டுப் பெறுவீர்கள். பணிகளைச் சிறப்பாக செய்யுங்கள். குடும்பத்தில் யாருக்கேனும் மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவீர்கள்.
சித்திரை 1,2: குலதெய்வ வழிபாடு நன்மை தரும். பயணங்களால் செலவுகள் ஏற்படும். நிலம் சம்பந்தபட்ட இனங்களில் முதலீடுகள் செய்ய ஏற்ற வாரம். பங்குச் சந்தையில் அளவோடு முதலீடு செய்வது நல்லது.

செவ்வாய், புதன், சந்திரன் கூடுதல் நற்பலன்களை தருவர். மீனாட்சி வழிபாடு சகல நன்மை தரும்.
சித்திரை 3,4: பிள்ளைகள் வழியில் சுபச்செலவுகள் ஏற்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். உங்களின் விருப்பங்கள் நிறைவேறும். வியாபாரத்தை பெருக்க புதிய வாய்ப்புகள் தேடிவரும்.
சுவாதி: பணிச்சுமை அதிகரித்தாலும் மேலதிகாரியிடம் நற்பெயர் பெறுவீர்கள். வாகன வகையில் ஆதாயம் உண்டாகும். கணவன், மனைவி இடையே ஒற்றுமை மேம்படும்.
விசாகம் 1,2,3: வீட்டைச் சீர்செய்யத் திட்டங்கள் தீட்டுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். குழந்தை பாக்கியம் வேண்டியவர்களின் கனவு நனவாகும். உடன் பிறந்தவர்களுக்கு உதவுவீர்கள்.
சந்திராஷ்டமம்: 30.11.2020 காலை 6:00 – 1.12.2020 இரவு 10:15 மணி

புதன், சந்திரன், சுக்கிரன் அனுகூல பலனைத் தருவர். துர்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.
விசாகம் 4: உடல்நிலை லேசாக பாதிக்கப்படலாம். பணி, வணிகம், வியாபாரம் சிறக்கும். உறவினர்கள் வழியில் செலவுகள் அதிகரிக்கக்கூடும். நண்பர்களை மகிழ்வித்து நீங்களும் மகிழ்வீர்கள்.
அனுஷம்: குடும்பத்தில் அமைதியும், சலசலப்பும் இருக்கும். உறவினர்கள் முன்னேற்றமான சூழ்நிலையை அடைவார்கள்.சகபணியாளர்களுடன் அனுசரித்து செல்வீர்கள். பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வீர்கள்.
கேட்டை: பொருளாதாரத்தில் இருந்த சிக்கல்கள் தீர ஆரம்பிக்கும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். தொழில், வியாபார வளர்ச்சிக்கான அடித்தளத்தை இடுவீர்கள். யாரிடமும் கவனமாகப் பேசுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 1.12.2020 இரவு 10:16 – 4.12.2020 காலை 6:46 மணி

சுக்கிரன், ராகு, கேது தாராள நற்பலன்களை வழங்குவர். ராமர் வழிபாடு நிம்மதி தரும்.
மூலம்: வீடு மாற எடுக்கும் முயற்சியில் பலன் கிடைக்கும். பெரிய அளவிலான முதலீடுகளைத் தவிர்க்கவும். தொழில் தொடங்குவோர் நன்கு ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது.
பூராடம்: நண்பர்களுக்கு சரியான நேரத்தில் ஆலோசனை வழங்குவீர்கள். உறவினர்கள் வழியில் கூடுதல் செலவுகள் இருக்கும். வயிறு சம்பந்தமான பிரச்னையால் உடல்நிலை சற்று பாதிப்படையும்.
உத்திராடம் 1: கணவரின் முயற்சியால் குடும்ப நிலை உயரும். வீட்டில் சுபச்செலவுகள் ஏற்படும். வாகன சேர்க்கை ஏற்படும். பெண்கள் தங்க, வெள்ளி பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரிகளுக்கு தன வரவு திருப்தி தரும்.
சந்திராஷ்டமம்: 4.12.2020 காலை 6:47 – 6.12.2020 மதியம் 12:44 மணி

குரு, சூரியன், புதன், சுக்கிரனால் நன்மை கிடைக்கும். பெருமாள் வழிபாடு நல்வாழ்வு தரும்.
உத்திராடம் 2,3,4: முயற்சிகள் சிறு தடைக்கு பிறகே நிறைவேறும். கணவன், மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்கள் உதவி செய்வதால் மகிழ்ச்சி அடைவீர்கள். சேமிப்பு பணம் கைகொடுக்கும்.
திருவோணம்: பெற்றோரின் உடல் நலம் சீராக இருக்கும். உடன்பணிபுரிபவர்களுடன் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டியிருக்கும். குடும்பத்தில் தள்ளிப்போன சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.
அவிட்டம் 1,2: பிள்ளைகள் வழியில் செலவுகள் அதிகரிக்கும். பெற்றோர் உடல்நலம் முன்பைவிட சிறக்கும். தவறான வழியில் கவனச்சிதறல் ஏற்படாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.
சந்திராஷ்டமம்: 6.12.2020 மதியம் 12:45 மணி – நாள் முழுவதும்

சனி, சுக்கிரன், சந்திரனால் அளப்பரிய நன்மை கிடைக்கும். சிவன் வழிபாடு சிரமத்தை போக்கும்.
அவிட்டம் 3,4: கடன் பிரச்னைகள் குறையத் தொடங்கும். வியாபாரிகளுக்கு நல்ல திருப்பம் ஏற்படும். மேலதிகாரிகள் உங்களுக்கு அனுசரணையாக நடந்துகொள்வார்கள். நண்பர்களுக்கு உதவுவீர்கள்.
சதயம்: புதிய திட்டங்கள் தாமதமாகும். குழந்தைகள் உடல் நலனில் கூடுதல் கவனம் வேண்டும். தம்பதி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். தனவரவு அதிகரிப்பதால் பழைய கடன்கள் தீரும்.
பூரட்டாதி 1,2,3: குடும்பத்தினரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறையும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி சம்பந்தமான பேச்சுகள் நடைபெறும். பிள்ளைகள் மூலம் சந்தோஷமான செய்திகள் வந்து சேரும்.

குரு, புதன், ராகு அதிர்ஷ்ட பலன்களை வழங்குவர். சரபேஸ்வரர் வழிபாடு சுபிட்சம் தரும்.
பூரட்டாதி 4: அதிக நன்மையான பலன்களை எதிர்பார்க்க முடியாத வாரம் இது. சகஊழியர்களின் குடும்ப விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்லுங்கள்.
உத்திரட்டாதி: சிறு உபாதைகளுக்கும் உடனடி மருத்துவ சிகிச்சை அவசியம். வாகன செலவுகள் ஏற்படும். நண்பர்களின் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். சேமிப்பை அதிகப்படுத்துவீர்கள்.
ரேவதி: செலவுகள் குறைந்து நிறைவோடு இருப்பீர்கள். தொலைத்தொடர்பு அனுகூலம் தரும். தொழில், வியாபாரத்தில் புதிய முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here