கிளிநொச்சியில் பிராந்திய ஆங்கில வள நிலையம் ஆளுநரால் திறந்து வைப்பு

கிளிநொச்சி வலயக்கல்வி பணிமனையில் பிராந்திய ஆங்கில வள நிலையத்தை வடக்கு மாகாண ஆளுநர் பிஎஸ்எம் சாள்ஸ் நேற்று (25) அங்குரார்பணம் செய்து வைத்துள்ளார்.

கிளிநொச்சி நகர றோட்டறிக் கழகத்தின் ஏற்பாட்டில் இச் செயற்பாட்டிற்கான ரூபா 300,000/- (மூன்று இலட்சம்) நிதியினை லண்டனைச் சேர்ந்த ரட்ணம் பவுண்டேசன் அமைப்பின் நிறுவுனர் Dr.நித்தியானந்தம் அவர்கள் வழங்கியிருந்தார்,

இதற்கான Smart Board, Malty Media Projector, Laptop என்பன வழங்கி வைக்கப்பட்டது.

ஏற்கனவே லண்டன் ரட்ணம் பவுண்டேசன் அமைப்பின் உதவியுடன் கிளி/வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயம்,
கிளி/இராமகிருஷ்ண வித்தியாலயம், புதுமுறிப்பு விஞ்ஞானக் கல்வி நிலையத்தின் கணினி கூடம், கணினிகள் என்பன அண்மைக் காலத்தில் கிளிநொச்சியில் குறித்த அமைப்பினரால் வழங்கப்பட்டுள்ள கல்விக்கான உதவிகளாகும்,

இந் நிகழ்விற்கு முதன்மை அதிதியாக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி P.S.M. சாள்ஸ் கலந்து கொண்டு செயற்பாடுகளை ஆரம்பித்து வைத்தார். இந் நிகழ்வில் கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன், மாகாண கல்விப் பணிப்பாளர் உதயகுமார், கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் ரு கமலராஜன் மற்றும் வலயக் கல்வி பணிமனை உத்தியோகத்தர்கள் ஆசிரியர்கள், எமது கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here