கூட்டமைப்பு வேட்பாளர்கள்- அழகக சங்கங்களின் பிரதிநிதிகள் சந்திப்பு!

யாழ்மாவட்ட அழகக சங்கங்களின் சமாசத்தினருக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர்களிற்குமிடையிலான சந்திப்பு நேற்றுக்காலை யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் யாழ்மாவட்ட வேட்பாளர்களான த.சித்தார்த்தன், பா.கஜதீபன், மாவை சேனாதிராசா, இ.ஆனல்ட் ஆகியோரும் வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானமும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது தற்போதைய அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பாக வேட்பாளர்களால் அழகக சங்க சமாச நிர்வாகத்தினருக்கு தெளிவுபடுத்தப்பட்டதுடன் சமாசத்தினரின் கோரிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here