மேலும் 289 பேர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்!

தான்சானியாவிலிருந்து புறப்பட்ட இலங்கை எயார்லைன்ஸ் விமானம், 289 இலங்கையர்களுடன் இன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.

ஆபிரிக்காவின் மடகாஸ்கர், மொசாம்பிக், உகாண்டா, கென்யா, ருவாண்டா மற்றும் தான்சானியாவில் உள்ள ஹோட்டல் துறையில் பணியாற்றியர்களே இன்று நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் யுஎல் -1710 இன்று அதிகாலை 5.00 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.

பயணிகள் அனைவரும் பிசிஆர் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு, விமான நிலையத்திற்கு அண்மையிலுள்ள ஹொட்டலில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். பிசிஆர் முடிவுகள் கிடைத்ததும், தனிமைப்படுத்தல் மையங்களிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here