பொதுமக்களிற்கு மின்சாரசபை விடுத்துள்ள மகிழ்ச்சியான அறிவித்தல்!

இறுதியாக வழங்கப்பட்ட மின் பட்டியலே சரியானது. இரண்டு மாத பட்டியலையும் சேர்த்து 60 வீத கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ளது. கட்டணத்தை தவணை முறையில் செலுத்தலாம். எந்தவொரு வீட்டிலும் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என அமைச்சர் மஹிந்த அமரவீர தெளிவுபடுத்தியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனா பரவல் காரணமாக சில சிக்கல் காணப்பட்டன. இறுதியாக வழங்கப்பட்ட மின்சார கட்டணத்துக்கான பட்டியலே சரியானது. மின்சார பாவனையாளர்களுக்கான 30 சதவீத சலுகை அவ்வாறே வழங்கப்பட்டுள்ளது. 2 மாதங்களிற்கான மின்சார பட்டியல் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதால் 60 சதவீத சலுகை பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி மாதத்தின் பின் வீட்டின் அனைத்து அங்கத்தவர்களும் வீட்டில் இருந்ததால் மின் பாவனை அதிகரித்துள்ளது. என்றாலும் பெப்ரவரி மாதம் பெற்றுக்கொண்டிருந்த மின் கட்டண பட்டியலுக்கு நிகரான- அதைவிட அதிகரிக்காத மின் கட்டண பட்யலே பாவனையார்களிற்கு வழங்கப்பட்டுள்ளது.

அந்த கட்டணத்தை பலதவணைகளில் செலுத்த முடியும். எந்தவொரு வீட்டிலும் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here