குண்டு பரிசோதனையில் காயமடைந்த சஹ்ரானின் சகோதரன் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலேயே சிகிச்சை பெற்றார்!

மனித வெடிகுண்டு சஹ்ரான் ஹாஷிமின் சகோதரன் ரில்வான், போலிப் பெயரில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த விடயம் வெளியாகியுள்ளது.

2018 ஓகஸ்ட் 27ஆம் திகதி அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சஹ்ரான் ஹாஷிமின் சகோதரன் ரில்வான், சாய்ந்தமருது சுற்றிவளைப்பில் குண்டை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டார். அவர் ஏற்கனவே நடந்த வெடிப்பு சம்பவமொன்றில் காயமடைந்து கைவிரல்களை இழந்திருந்ததாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இந்த விடயம் பற்றி நேற்று (12) சாட்சியமளிக்கப்பட்டது.

ஜாஹித் என்ற போலி பெயரில் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் காயமடைந்ததாக குறிப்பிட்டே சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆணைக்குழு முன் சாட்சியமளித்த கொழும்பு தேசிய மருத்துவமனையின் வைத்தியர் எச்.கே.சந்தன, தலை, இடது கண் மற்றும் கையில் கடுமையான காயங்களுடன் நோயாளி ஐ.சி.யுவிற்கு கொண்டு வரப்பட்டதாகக் கூறினார். மேலும் நான்கு பேர் நோயாளியுடன் வந்துள்ளனர் என்றும் அவர் கூறினார். அவரது பெயர் ஜாஹித் என பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். இது போலி பெயர் என்று தெரிய வந்துள்ளது.

14, டெல்கஹகொட, ஹிங்குல என்ற போலி முகவரி வழங்கப்பட்டுள்ளது.

சரில்வான் ஹாஷிமின் புகைப்படத்தைக் காட்டி, அவரா நோயாளியா என்று ஆணைக்குழு வினவியபோது, வைத்தியர் ஆமென கூறினார்.

மாவனெல்லவில் புத்தர் சிலைகளை சேதப்படுத்தியதற்காக கைது செய்யப்பட்ட முகமது இப்ராஹிம் சாதிக் அப்துல்லா ஹக்கின் புகைப்படத்தை காண்பித்தபோது, அவர் நோயாளியின் பாதுகாவலராக வந்ததாக தெரிவித்தார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தாதியர் ஒருவரும் நேற்று சாட்சியம் அளித்தார்.

வேலை செய்யும் இடத்தில் ஒரு எரிவாயு சிலிண்டர் வெடித்தது என ரில்வான் அனுமதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

அவரது காயங்களில் சந்தேகமடைந்து வைத்தியசாலை பொலிசாரிடம் சென்றபோது, ரில்வானுடன் வந்தவர்கள் கோயமடைந்தனர் என்றும் தெரிவித்துள்ளார்.

ரில்வான் சுமார் 3 வாரங்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here