‘அவர்கள் சொல்வதை நம்பாதீர்கள்’: கனடாவை கேட்கிறது இலங்கை தூதரகம்!

கனடாவிலுள்ள சில இலங்கை விரோத செயற்பாட்டாளர்களால் பரப்பப்படும் பாரபட்சமான தகவல்களால் திசை திருப்பப்படாமல், சமச்சீரான பார்வையுடன் அணுகுங்கள் என கனடாவிலுள்ள இலங்கை தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஒன்றாரியோ சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட, 2009 போர்க்காலத்தில் இடைக்கப்பட்ட மனித உரிமைமீறல் தொடர்பான, தனிநபர் மசோதா 104 தொடர்பாக, நேற்று வெளியிட்ட அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. இனப்படுகொலை நடந்ததாகவும்,

2009இல் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் குறித்து மிகையான தகவல்களை அது கொண்டிருப்பதாகவும், கனடிய கமஷ்டி மற்றும் மாகாண அரசுகளுடன் இலங்கை தொடர்ந்து பணியாற்றும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை இலங்கை நிராகரித்ததுடன், கனடாவிலுள்ள இலங்கை விரோத செயற்பாட்டாளர்களால் பரப்பப்படும் தகவல் என வர்ணித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here