கொரோனா அச்சம்: 10 அடி தூரத்தில் டோர்ச் அடித்து சிகிச்சை பார்த்த மருத்துவர்

கொரோனா அச்சத்தால் சிறுவன் ஒருவனை 10 அடி தூரத்திலேயே நிறுத்தி, டோர்ச் அடித்து சிகிச்சையளித்த சம்பவம் நடந்துள்ளது.

தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் கண்டமலங்கலம் ஆரம்ப சுகாதார மையத்தில் இந்த சம்பவம் நடந்தது.

காய்ச்சல் காரணமாக கண்டமங்கலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்றுள்ளார் 12 வயது மதிக்கத்தக்க சிறுவன். காய்ச்சல் என்றதும், மருத்துவமனை வாயிலிலேயே நிற்கவைக்கப்பட்ட சிறுவனை, மருத்துவர் தான் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து டோர்ச் அடித்துப் பார்த்து மருந்து எழுதிக் கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், காய்ச்சல் பாதித்த சிறுவனுக்கு மிக அலட்சியமாக மருத்துவம் பார்த்த மருத்துவரின் செயல் பதிவான விடியோ ருவிற்றரில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here