முன்னாள் கணவனை கேவலப்படுத்திய நடிகைக்கு கொலை மிரட்டல்!

பிரபல சின்னத்திரை நடிகை டொவோலீனா பட்டாசார்ஜி. இவர் பல இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து இருக்கிறார். பரத நாட்டிய கலைஞராகவும் இருக்கிறார். கடந்த வருடம் பிக்பாஸ் 13 நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் அர்ஹான் கான், ரஸாமி தேசாய் ஆகியோரும் பங்கேற்று டொவோலீனாவுடன் பிக்பாஸ் வீட்டில் இருந்தனர். அப்போது அர்ஹானுக்கும் ரஸாமிக்கும் காதல் மலர்ந்தது. அதன்பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். இந்த காதல் முறிவு விவகாரத்தை சொல்லி அர்ஹான் கானை டொவோலீனா அடிக்கடி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு சபீகா என்ற பெண்ணிடம் இருந்து செல்போனில் கொலை மிரட்டல் குறுந்தகவல் வந்துள்ளது.

அதில் “அர்ஹான் கானை தொடர்ந்து கேவலப்படுத்தி வருகிறாய். ரஸாமி தேசாய், சித்தார்த் சுக்லா ஆகியோருடன் சேர்ந்து இந்த செயலை செய்வது தெரியும், அர்ஹானை பற்றி பேசுவதை நிறுத்திக்கொள். இனிமேல் பேசினால் அது உனது கடைசி நாளாக இருக்கும்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

கொலை மிரட்டல் விடுத்த பெண் மீது நடவடிக்கை எடுக்கும்படி டொவோலீனா, மும்பை சைபர் கிரைம் போலீசுக்கு புகார் அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here