டவுசருடன் ஊர்சுற்றும் செம்பருத்தி ஜனனி!

விஜய் டிவியின் மௌன ராகம் சீரியலில் அறிமுகம் ஆனவர் ஜனனி அசோக்குமார்.

அந்த சீரியலில் இசை கற்று தரும் ஆசிரியராக நடித்து இருந்தார். அதன் பின் ஜீ தமிழில் செம்பருத்தி சீரியலில் அகிலாண்டேஸ்வரிக்கு மருமகளாக நடித்து கொண்டு இருக்கிறார்.

ஜனனி அசோக்குமார் அடிக்கடி தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஏதாவது புகைப்படத்தை பதிவேற்றி லைக்ஸை அள்ளுவார். இவருடைய ஹோம்லி லுக் இளைஞர்களை கவரும் படி இருந்தது. அதனால் ஜனனிக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள்.

குறிப்பாக இவர் சேலையில் பதிவேற்றும் படங்களிற்கு ரசிகர்கள் அதிகம். இது வரை ஹோம்லியான புகைப்படங்களை வெளியிட்டு வந்த ஜனனி, தற்போது அதிரடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார்.

ஓய்வுக்காக கோவா சென்றுள்ள ஜனனி, காற்சட்டை அணிந்து கொண்டு ஊர் சுற்றி வலம் வரும் புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here