பிரபல ஹிந்தி சீரியல் நடிகை சேஜல் ஷர்மா இன்று அதிகாலை தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை சேர்ந்தவர் சேஜல் சர்மா (26). இவர் விளம்பர மாடல் ஆகவும், சீரியல் நடிகையாகவும் இருந்தார். அத்துடன் வெப் சீரியலிலும் நடித்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், இன்று மும்பையில் உள்ள தன் வீட்டில் அதிகாலை 4 மணிக்கு மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இதை அறிந்த சேஜல் ஷர்மாவில் நண்பர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதை அறிவித்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கான அனுப்பி வைக்கப்பட்டது.
சேஜல் சர்மாவின் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலிஸார் விசாரித்து வருகின்றனர்.
சேஜலின் சீரியல் சமீபத்தி முடிவடைந்ததை அடுத்து அவருக்கு போதிய வாய்ப்புகள் இல்லாததால் அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அதனால் இந்த முடிவு எடுத்திருப்பார் என்றும் செய்திகள் வெளியாகிறது.