சமீபத்திய கட்டுரைகள்

கொஞ்சம் அசால்ட்டான யாழ் ரௌடிகள்: மருத்துவர் வீடு மீதான தாக்குதலுக்கு காரணம் சொல்லும் பொலிஸ்!

யாழ்ப்பாணம், கொக்குவில் சம்பியன் வீதியில் மருத்துவர் வீடு நடத்தப்பட்ட தாக்குதல், இலக்கு மாறி தாக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய கும்பலின் இலக்கு மருத்துவரின் வீட்டுக்கு அண்மையாக உள்ள வாள்வெட்டுச் சந்தேகநபர் ஒருவரின் வீடாகும் என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். கொக்குவில் சம்பியன் லேனில் உள்ள மருத்துவர் ஒருவரின் வீட்டுக்குள் நேற்று...

UPDATE: தாதியர்களின் நாளைய போராட்டம் வாபஸ்!

நாளைய தினம் அறிவிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பை வாபஸ் வாங்குவதாக வடக்கு தாதியர் சங்கம் சற்று முன்னர் அறிவித்துள்ளது. தமது கோரிக்கைகள் எதையும் அதிகாரிகள் கவனத்தில் எடுக்காத போதும், சில உள்ளக காரணங்களால் நாளை அறிவிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பை வாபஸ் வாங்குவதாக அறிவித்துள்ளனர். எனினும், விரைவில் பிறிதொரு நாளில் தமது பணிப்புறக்கணிப்பு நடக்குமென்றும் குறிப்பிட்டுள்ளனர்.

திருகோணமலை சுகாதார தொண்டர் நியமனம்: கூட்டமைப்பிற்குள் அதிருப்தி!

திருகோணமலையில் வழங்கப்பட்டுள்ள சுகாதார தொண்டர் நியமனத்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் சர்ச்சை வெடித்துள்ளது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தனது வாக்கு அரசியலை மட்டும் கவனத்தில் கொண்டு இதை செய்து விட்டார், கூட்டமைப்பின் ஏனைய கிழக்கு பிரதிநிதிகளிற்கு அவர் ஓர வஞ்சனை செய்து விட்டார் என ஏனைய உறுப்பினர்கள்...

வவு.வடக்கு பிரதேச செயலாளரிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆவணங்களை சமர்ப்பித்த மாகாணசபை உறுப்பினர்!

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமனுக்கு எதிரான 55 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய ஆவணங்களை வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் இன்று காலை கொழும்பில் அமைந்துள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் செயலாளர் திருமதி சாந்தி ஜெயசேகராவிடம் கையளித்துள்ளார். இதன்போது இதற்கான நடவடிக்கையினை உடன் எடுப்பதாக ஆணைக்குழுவின் செயலாளர் உறுதி மொழியளித்துள்ளதாக...

விக்னேஸ்வரனிற்கு அதை சொல்ல உரிமையுண்டு!

யுத்த நினைவு சின்னங்களை அகற்றுவதோ, அமைப்பதோ இப்போதைய பிரச்சினையல்ல. இருக்கும் பிரச்சினைகளை தீர்த்து அனைவரும் ஒற்றுமையாக வாழ்வதே முக்கியமானது என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் நிதி அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். யுத்த நினைவு சின்னங்களை அகற்ற வேண்டுமென வடக்கு...

சிறைக்காவலை இடமாற்றம் செய்ததை எதிர்த்து கூரையில் ஏறிய பெண் கைதி!

வெலிக்கடை சிறைச்சாலையில், பெண் கைதி ஒருவர், கூரை மீ​தேறி மீண்டும் போராட்டத்தில் இன்று (20) ஈடுபட்டிருப்பதாக தெரியவருகிறது. சிறைக்காவலரை இடமாற்றம் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. தமக்கான அடிப்படை உரிமைகளைக் கோரி, கடந்த 13 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள பெண் கைதிகள்...

திலீபனின் நினைவிட சுற்றுவேலி விவகாரம்: மாநகரசபையில் கடும் கண்டனம்!

யாழ்ப்பாண மாநகர சபையின் அமர்வு இன்று (20) திங்கட்கிழமை முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகியது. இதன்போது, நினைவுத் தூபி அமைப்பதற்காக மாநகர சபை பொறிளியலாளர் ஊடாக நியமிக்கப்பட்ட 3 ஊழியர்களுக்கு அரச புலனாய்வுப் பிரிவினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து வேலி...

மூன்றாவது முறையாகவும் யாழில் முற்றுகையிடப்பட்ட கடை: இன்றும் மாவா போதைப்பொருள் மீட்பு!

யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் இயங்கிவரும் கேக் விற்பனை நிலையம் இன்று (20) திங்கட்கிழமை மூன்றாவது தடவையாக முற்றுகையிடப்பட்டது. அங்கு முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் 30 பைக்கட்டுக்களாகப் பொதி செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் மாவா போதைப்பொருள் மீட்கப்பட்டது. அதனை விற்பனைக்காக வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் குடும்பத்தலைவர் ஒருவரை...

பிரமாண்ட பிள்ளையார் ஓவியம்: யாழ் இளைஞன் கலக்கல்!

யாழ்ப்பாண இளைஞர் ஒருவரால் வரையப்பட்ட பிள்ளையார் ஓவியம் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது. யாழ்ப்பாணத்தின் பிரமாண்ட பிள்ளையார் ஓவியம் இதுதான் என்றும் குறிப்பிடப்படுகிறது. மானிப்பாய் சங்குவேலி சிவஞானப்பிள்ளையார் ஆலயத்தில் இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது. ஆலயத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஐங்கரன் என்ற இளைஞர் இந்த ஓவியத்தை வரைந்துள்ளார். சமூக வலைத்தளங்களில் இந்த ஓவியத்திற்கு...