அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த ஹங்வெல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு எதிராக ரூ. 1,020,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தினால் அபராதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த அபராதம், முட்டைகளை அதிகமாக விற்பனை செய்ததற்கு எதிராக விதிக்கப்பட்ட அதிகபட்ச தொகையாகக் கூறப்படுகிறது.
இதேவேளை, அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் முட்டைகளை விற்பனை செய்த 4 கடைகளுக்கு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதித்துள்ளது.
தெமட்டகொட பிரதேச வர்த்தகர் ஒருவருக்கு 1 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இரண்டு கடைக்காரர்களுக்கு பலாங்கொடை நீதவான் நீதிமன்றம் இரண்டு இலட்சம் ரூபா அபராதம் விதித்தது