பிக்பாஷ் தொடரில் ஸ்டொய்னிஸ் அசுர சத சாதனை!

மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி தொடக்க வீரர் மார்கஸ் ஸ்டொய்னிஸ் இன்று ஞாயிறன்று நடந்த பிக்பாஷ் ரி 20 கிரிக்கெட் லீக் போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் அணிக்கு எதிராக 79 பந்துகளில் 147 ரன்கள் எடுத்து நொட் அவுட் என்று புதிய பிக்பாஷ் அதிரடி சாதனையை நிகழ்த்தினார்.

வரலாற்றை மாற்றி எழுதிய இந்த இன்னிங்சில் ஸ்டொய்னிஸ் பிக்பாஷ் அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோருக்கான சாதனையாளரானார்.

இந்த அதிரடி மூலம் டியோர்க்கி ஷோர்ட் 2 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த 69 பந்து 122 ரன்கள் சாதனையை அனாயசமாக முறியடித்தார். ஸ்டொய்னிஸ், ஹில்டன் கார்ட்ரைட் (59) அதிரடியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 219 ரன்களை விளாசியது.

இதில் முதல் விக்கெட்டுக்காக ஸ்டொய்னிஸ், கார்ட்ரைட் ஜோடி 207 ரன்களை குவித்தனர். ஸ்டொய்னிஸ் 79 பந்துகளில் 147 ரன்களை எடுக்க 13 பவுண்டரிகள் 8 சிக்சர்கள் உதவியது.

வரும் ஐபிஎல் 2020யில் டெல்லி கப்பிடல்ஸ் அணியின் ஏற்கெனவே இருக்கும் பல அதிரடி வீரர்களில் ஸ்டொய்னிஸும் ஒருவர். இவரது இந்த அதிரடி இன்னிங்ஸை டெல்லி கப்பிடல்ஸ் அணி தன் ட்விட்டரில் புகழ்ந்து தள்ளியுள்ளது.

மேலும் இந்த ஆண்டு பிபில் தொடரில் 8 இன்னிங்ஸ்களில் 331 ரன்களுடனும் 55 ரன்கள் சராசரியுடனும் ஸ்டொய்னிஸ் முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here