பெண்களின் சந்தேகங்கள்: டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்!


கிளிடோரியஸ் பற்றி இரண்டு வாரங்களின் முன்னர் மேலோட்டமாக குறிப்பிட்டிருந்தேன். அது தொடர்பில் பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இது தொடர்பான, சிறிய சிறிய பல கேள்விகள் வந்துள்ளதால் அவற்றை தொகுத்து, இந்த பகுதியிலேயே பதில் தந்து விடுகிறேன்.

கிளிடோரியஸ் என்பது ஆணுடைய பாலுறுப்பின் ‘மினியேச்சர் வடிவம்’ என்று சொல்லலாம். அதில் நிறைய உணர்வு நரம்புகள் உள்ளன. அது இன்பத் தூண்டலைக் கடத்துகிறது. உடலுறவுகொள்ளும்போது, கிளிடோரியஸ் பகுதி, தேய்த்துக் கொடுக்கப்படுகிறது. யோனிக்குள் ஆணுறுப்பு நுழைந்து மேலும் கீழுமாக அசைந்து அழுத்தும் சமயத்தில், சீராக உச்சநிலையை எட்டுவதற்கு உதவி செய்கிறது.

உடலுறவின்போது கிளிடோரியஸைத் தனிப்பட்ட முறையில் தூண்டிவிடுவது அவசியமா? 

நேரடியாக கிளிடோரியஸைத் தூண்டிவிடுவது அவசியம் இல்லை. உடலுறவின்போது, ஆணுறுப்பு நேரடியாக கிளிடோரியஸைத் தொடுவது இல்லை. யோனியின் உட்புற உதடுகளான லேபியா மைனோராவை ஆணுறுப்பு இழைந்து கொடுப்பதே போதுமானதாக இருக்கிறது.

சில இனக் குழுக்களில் பெண்களின் கிளிடோரியஸை ஏன் அகற்றுகிறார்கள்?

சில ஆபிரிக்க மக்கள் குழுக்களிடமும் அபிசினியாவிலும் பெண்கள் பூப்படையும் நேரத்தில் கிளிடோரியஸை அகற்றிவிடும் பழக்கம் இருக்கிறது. பெண்களின் செக்ஸ் மோகத்தைத் தவிர்க்க வேண்டும் என்பதுதான் அதற்குக் காரணமாக இருக்க வேண்டும். இதை, ‘கிளிடோரிடெக்டமி’ என்கிறோம். அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பெண்களின் சுய இன்ப இச்சையைத் தண்டிக்கும் விதமாக, கிளிடோரியஸை அகற்றும் தண்டனைகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

பாலியல் புத்தகங்களை, சினிமாக்களைப் பார்த்திருக்கிறேன். அதில் பெண் உறுப்புகள் வேறு மாதிரியாக இருக்கின்றன. என்னுடைய பெண் உறுப்பு வேறு மாதிரியாக இருப்பதாகக் குழப்பம் அடைகிறேன். 

நீங்கள் குழப்பம் அடைய வேண்டியதே இல்லை. இயற்கை பல வேறுபாடுகளைக் கொண்டதுதான். இரண்டு நபர்கள் ஒரே மாதிரி இருப்பது இல்லை. உங்களுக்குப் பெரும் வேறுபாடு இருப்பதுபோல தோன்றினால் மருத்துவரை அணுகிக் குழப்பத்தைப் போக்கிக்கொள்ளுங்கள்.

நான் சிவப்பாக இருக்கிறேன். ஆனால், பெண் உறுப்பு கறுப்பாக இருக்கிறது. அது ஏன்?

பெண் உறுப்பைச் சுற்றி தோல் நிறமிகள் அதிகமாக இருப்பதுதான் காரணம். வேறு தோல் நோயாக இருக்கக்கூடும் என, நீங்கள் நினைத்தால் தோல் மருத்துவரை அணுகவும்.

பதின்ம வயதில் பாலியல் உணர்வு தூண்டி, பெண் உறுப்பை தேய்ப்பதால்தான் பெண் உறுப்பு கறுப்பாக இருப்பதாக சிலர் கருதுவதுண்டு. அது தவறானது.

கடந்த பாகத்தை படிக்க: பெண்கள் திருமணத்திற்கு தயங்குவது பாலியல் அறியாமையாலேயே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here