இந்தவார ராசிபலன்கள் (12.01.2020- 18.1.2020)

பெரும்பான்மையான கிரகங்கள் அனுகூல அமர்வில் உள்ளனர். உறவினரின் ஆதரவு ஊக்கம் தரும்.

சமூகப் பணியில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். புதிய வாகனம் வாங்க அனுகூலம் உண்டு. பிள்ளைகளின் சொல்லும், செயலும் பெற்றோருக்கு பெருமை சேர்க்கும். எதிரியால் உருவான தொந்தரவு குறையும். குடும்பநலன் சிறக்க மனைவி தேவையான பணி மேற்கொள்வார். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி, பணவரவு அதிகரிக்கும். பணியாளர்கள் கூடுதல் தொழில் நுட்பம் அறிந்து கொள்வர். சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். கணவரின் அன்பினால் பெண்கள் மகிழ்ச்சி அடைவர். மாணவர்கள் படிப்பில் சிறந்து நண்பருக்கும் உதவுவர்.
பரிகாரம் : சிவன் வழிபாடு வளம் தரும்.

சுக்கிரன், சந்திரனால் ஓரளவு நன்மை கிடைக்கும். வாழ்வில் புதிய மாற்றம் உருவாகும். உடன் பிறந்தவர்கள் உதவி செய்வர்.

வாகனப்பயன்பாடு அளவுடன் இருக்கும். பிள்ளைகள் சில விஷயங்களில் பிடிவாத குணத்துடன் செயல்படுவர். இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவீர்கள். வழக்குகளில் அனுகூலம் ஏற்படும். மனைவி அன்பு, பாசத்துடன் உதவுவார். வெளியூர் பயணம் ஓரளவு நன்மையை தரும். தொழில், வியாபார வளர்ச்சிக்கு சில மாற்றம் தேவைப்படும். பணியாளர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். கணவரின் அன்பு, பாசத்தில் பெண்கள் மகிழ்வர். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் வேண்டும்.

பரிகாரம் நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.

செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் கூடுதல் நற்பலன் தருவர். புதிய திட்டத்தை செயல்படுத்துவீர்கள்.

நண்பர்களின் உதவி கிடைக்கும். வாகனப் பயணம் எளிதாக அமையும். பிள்ளைகள் படிப்பு, வேலைத் திறன்களை வளர்த்துக் கொள்வர். வழக்கு, விவகாரத்தில் சுமூக தீர்வு கிடைக்கும். மனைவி அதிக அன்பு, பாசம் கொள்வார். குடும்பத்தில் சுப நிகழ்வு கைகூடும். உறவினரின் வருகை மகிழ்ச்சி தரும். தொழில், வியாபாரம் செழிக்கும். கூடுதல் பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு, சலுகை பெறுவர். பெண்கள் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவர். மாணவர்கள் படிப்பில் நல்ல முன்னேற்றம் காண்பர்.
பரிகாரம் : மீனாட்சி வழிபாடு மகிழ்ச்சி தரும்.

கேது, சனீஸ்வரர், சுக்கிரன், சந்திரன் சிறப்பான பலன் தருவர். பேச்சில் நிதானம் தேவை. உடன்பிறந்தவர்களால் உதவி உண்டு.

குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி கூடும். வெளியூர் பயணம் அதிகரிக்கும். பிள்ளைகள் சில செயல்களில் பிடிவாதம் கொள்வர். சத்தான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். மனைவியின் செயல்களை பாராட்டுவீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டங்களை தவறாமல் பின்பற்றவும். பிள்ளைகள் நலனில் பெண்கள் அக்கறை கொள்வர். மாணவர்கள் கவனமாக படித்து அதிக மதிப்பெண் பெறுவர்.
பரிகாரம் : விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.

சூரியன், புதன், ராகு, குருவினால் கூடுதல் பலன் கிடைக்கும். பணி நிறைவின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும்.

உடன் பிறந்தவர்கள் ஒற்றுமையுடன் உதவுவர். வாகன பயன்பாடு சீராக இருக்கும். பூர்வ சொத்தை கவனிப்பதற்கு நம்பகமானவர்களை பணியமர்த்தினால் நல்லது. பிள்ளைகளின் தேவையை நிறைவேற்றுவதால் மகிழ்ச்சி அடைவர். சத்தான உணவு உண்டு மகிழ்வீர்கள். மனைவிக்கு விரும்பிய பொருளை வாங்கித்தருவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும். தொழிற்சாலை பணியாளர்கள் பாதுகாப்பை பின்பற்றவும். பெண்கள் நகை, புத்தாடை வாங்க யோகம் உண்டு. மாணவர்கள் படிப்பில் முன்னேற நண்பரின் உதவி கிடைக்கும்.
பரிகாரம் : பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

செவ்வாய், சுக்கிரன், சந்திரனால் நன்மை உண்டு. குறை சொல்பவரிடம் விலகுவது நல்லது. கூடுதல் முயற்சியால் செயல்களில் முன்னேற்றம் ஏற்படும்.

உடன் பிறந்தவரின் உதவி கிடைக்கும். வீடு, வாகனத்தில் உரிய பாதுகாப்பை பின்பற்றவும். பிள்ளைகளின் தேவையை நிறைவேற்றுவீர்கள். ஒவ்வாத உணவினை தவிர்க்கவும். மனைவியின் கருத்துக்கு முக்கியத்துவம் தருவீர்கள். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலத்தை பாதுகாப்பது வளர்ச்சிக்கு உதவும். பணியாளர்கள் கூடுதல் உழைப்பால் பணி இலக்கை நிறைவேற்றுவர். பெண்கள் செலவில் சிக்கனத்தை பின்பற்றுவர். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் பெறுவர்.

சந்திராஷ்டமம்: 5.1.20 காலை 6:00 மணி – 6.1.20 இரவு 7:40 மணி
பரிகாரம்: பெருமாள் வழிபாடு செல்வ வளம் தரும்.

பெரும்பான்மை கிரகங்கள் அளப்பரிய நற்பலன் தருவர். நடைமுறை வாழ்வில் இருந்த சிரமம் குறையும்.

உங்களை அவமதித்தவர் வெட்கி தலைகுனிவர். வாகனப்பயணம் எளிதாகும். பிள்ளைகளின் அறிவுப்பூர்வ செயலால் மகிழ்வீர்கள். குடும்பத்தில் மங்கல நிகழ்வு ஏற்படும். உறவினர்களின் உதவி கிடைக்கும். மனைவியின் செயல்கள் சிறப்பாக நிறைவேற உதவுவீர்கள். தொழில், வியாபாரத்தில் தாராள பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் நிர்வாகத்திடம் நற்பெயரும், சலுகையும் பெறுவர். பெண்கள் நகை, புத்தாடை வாங்குவர். மாணவர்களுக்கு படிப்பில் உள்ள சந்தேகம் தெளிவடையும்.

சந்திராஷ்டமம் 6.1.20 இரவு 7:41 மணி – 8.1.20 நள்ளிரவு 3:33 மணி
பரிகாரம் துர்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.

சூரியன், குரு, சுக்கிரன், சந்திரன் சுப பலன் தருவர். பேச்சில் நிதானம், தெளிவு இருக்கும். எதிர்பாராத நன்மை கிடைக்கும்.

தாய் வழி உறவினர் அன்பு, பாசம் கொள்வர். பிள்ளைகள் பெற்றோரிடம் நண்பர்களாக பழகுவர். ஆரோக்கியம் மேம்பட சத்தான உணவு, சீரான ஓய்வு அவசியம். மனைவியின் செயல் நிறைவேற உதவுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை செழிக்கும். அரசு சார்ந்த உதவி எளிதில் கிடைக்கும். பணியாளர்கள் இலக்கை முடித்து சலுகை பெறுவர். பெண்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவர். மாணவர்கள் அபார ஞாபகத்திறனால் படிப்பில் முன்னேறுவர்.
பரிகாரம் : பைரவர் வழிபாடு துன்பம் போக்கும்.

சுக்கிரன், சந்திரனால் நற்பலன் கிடைக்கும். பணிகளை உத்வேகமாக துவங்குவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையை பாதுகாப்பது அவசியம்.

அறிமுகம் இல்லாதவருக்கு வீடு, வாகனத்தில் இடம் தரக்கூடாது. பிள்ளைகளின் குறைகளை இதமான அணுகுமுறையால் சரி செய்யவும். வழக்கு, விவகாரத்தில் தீர்வு பெற நல்ல வாய்ப்பு வரும். மனைவியின் உடல் நலத்திற்கு சிகிச்சை தேவைப்படலாம். தொழில், வியாபாரத்தில் பணவரவு சீராக கிடைக்கும். பணியாளர்கள் பொறுப்புடன் பணிபுரிவது அவசியமாகும். பெண்கள் பிறருக்காக பணப்பொறுப்பை ஏற்க வேண்டாம். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை.
சந்திராஷ்டமம் : 12.1.2020 காலை 6:00 மணி – 13.1.2020 பகல் 12:45 மணி
பரிகாரம் : ஐயப்பன் வழிபாடு வெற்றி தரும்.

செவ்வாய், சுக்கிரன், ராகு, சந்திரனால் யோகம் உண்டாகும். பணிகளில் மனப் பூர்வமாக ஈடுபடுவீர்கள்.

புதியவர்களின் நட்பு கிடைக்கும். தாய் வழி சார்ந்த சொத்து, பூர்வ புண்ணிய பலன் கிடைக்கும். பிள்ளைகளின் செயல் வியப்பு, மகிழ்ச்சி தரும். இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவீர்கள். வழக்கு, விவகாரத்தில் சமரச தீர்வு கிடைக்கும். மனைவியின் அன்பு, பாசம் மகிழ்ச்சி தரும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். பணியாளர்கள் குறித்த காலத்தில் பணி இலக்கை நிறைவேற்றுவர். பெண்கள் தாய் வீட்டுக்கு உதவுவர். மாணவர்கள் படிப்புடன் கலைகளும் பயில்வர்.
சந்திராஷ்டமம் : 13.1.2020 பகல் 12:46 மணி – 15.1.2020 பகல் 3:18 மணி
பரிகாரம் : துர்கை வழிபாடு நம்பிக்கை தரும்.

குரு, சனீஸ்வரர், கேது, சுக்கிரன் நற்பலன் தருவர். பணிகளை மதி நுட்பத்துடன் நிறைவேற்றுவீர்கள்.

குடும்பத்தினர் அன்பு, பாசம் கொள்வர். சமூக நிகழ்வுகள் இனிய அனுபவம் தரும். வாகனப் பயன்பாடு திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகள் பெற்றோரிடம் வெளிப்படை மனதுடன் பழகுவர். உடல் ஆரோக்கியம் சீராக சிகிச்சை தேவைப்படும். மனைவி கருத்து இணக்கமுடன் நடந்து கொள்வார். தொழிலில் உற்பத்தி, விற்பனை திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு பணம் செலவாகும். பணியாளர்கள் கூடுதல் தொழில் நுட்பம் அறிந்து கொள்வர். பெண்கள் குடும்பச் செலவுகளில் சிக்கனத்தை கடைபிடிப்பர். மாணவர்கள் கலைகளை விரும்பி பயில்வர்.
சந்திராஷ்டமம் : 15.1.2020 பகல் 3:19 மணி – 17.1.2020 மாலை 4:53 மணி
பரிகாரம் : அம்பிகை வழிபாடு மகிழ்ச்சி தரும்.

சூரியன், புதன், சுக்கிரன், சந்திரன் கூடுதல் பலன்களை வழங்குவர். பணிகளை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள்.

உறவினர் வருகை மகிழ்ச்சி தரும். புத்திரர் புதிய விஷயங்களை அறிந்து கொள்வர். நோய் தொந்தரவு குறையும். மனைவியின் சொல்லும், செயலும் குடும்ப நலன் பேணுவதாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி சிறப்பாக நிறைவேறும். பணியாளர்கள் நிர்வாகத்திடம் நற்பெயரும், சலுகையும் பெறுவர். பெண்களுக்கு தாய் வீட்டு உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஞாபகத்திறன் மேம்படும்.

பரிகாரம் குரு வழிபாடு சுப வாழ்வு தரும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here