காதலருடன் சின்னத்திரை நடிகை அடித்த லூட்டியால் கதிகலங்கிய சிங்கப்பூர்!

தமிழ் தொலைக்காட்சி தொடர்கள் மூலம் மக்களிடம் பிரபலமானவர் சரண்யா சுந்தராஜன். செய்தி வாசிப்பாளராக தனது ஊடக பணியை தொடங்கிய இவர், படிப்படியாக உயர்ந்து தற்போது செய்தி ஆசிரியராக இருப்பதோடு, சீரியல் நடிகையாகவும் மாறிவிட்டார்.

முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ சீரியலில் நடித்ததன் மூலம் மக்களிடம் பிரபலமான சரண்யா, தற்போது தமிழகத்தை தாட்டி சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட தமிழகர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் பிரபலமான முகமாகிவிட்டார்.

இந்த நிலையில், சிங்கப்பூரில் நடைபெற்ற அரசு விழா ஒன்றில் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக கலந்துக் கொள்வதற்காக சமீபத்தில் சிங்கப்பூர் சென்ற சரண்யா. அங்கு அடித்த லூட்டியால் சிங்கப்பூரே கதிகலங்கி போய்விட்டதாம். தனியாக லூட்டி அடித்தால் பரவாயில்லை, காதலருடன் சேர்ந்து அடித்ததால் தான், சிங்கப்பூர் அரசு அதிகாரிகள் கடுப்பாகி விட்டார்களாம்.

நிகழ்ச்சிக்காக விருந்தாளியாக அழைக்கப்பட்ட சரண்யா, தனது காதலரையும் உடன் அழைத்து சென்றதோடு, அங்கு அவருக்கு கொடுக்கப்பட்ட சலுகைகளையும், வசதிகளையும் தனது காதலருடன் சேர்ந்து கொஞ்சம் ஓவராக பயன்படுத்தியதோடு, தங்களது காதல் விளையாட்டுகள் மூலம் மற்றவர்களை முகம் சுழிக்க வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் கோபமடைந்த சிங்கப்பூர் அரசு அதிகாரிகள், சரண்யாவை எச்சரித்து அனுப்பிவிட்டார்களாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here