தமிழிலும் தாராளம் காட்டும் ரெஜினா!

0

நான் சிகப்பு மனிதன் படத்திற்கு பிறகு திரு இயக்கும் படம் மிஸ்டர்.சந்திரமவுலி. இதில் கௌதம் கார்த்திக், அவரது தந்தை கார்த்திக், ரெஜினா கெசண்ட்ரா, வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் பிரதாப், சதீஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார், சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். போப்டா மீடியா ஒர்க் சார்பில் தனஞ்செயன் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் கடைசியாக தாய்லாந்தில் நடந்தது. வேலை நிறுத்தத்திற்கு முன்பே படப்பிடிப்பை முடித்து விட்டு திரும்பி விட்டனர். அங்கு கவுதம் கார்த்தி, ரெஜினா நடித்த பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டது. அதில் ரெஜினா படு கவர்ச்சியாகவும், கௌதமுடன் மிக நெருக்கமாகவும் நடித்திருப்பதாக கூறப்பட்டது. இப்போது அதன் படங்களை வெளியிட்டு அதனை உறுதி செய்துள்ளனர். ரெஜினா தெலுங்கு படங்களில் தான் கவர்ச்சியாக நடிக்கிறார். தமிழில் அப்படி நடிப்பதில்லை என்ற கருத்து இருந்தது. அதை உடைக்கும் வகையில் மிஸ்டர்.சந்திரமவுலியில் தாராளமாக நடித்திருக்கிறார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here