சுழிபுரத்தில் பொலிசாருக்கு அதிர்ச்சி: நான்கு அடி பங்கருக்குள் கிபிர்

சுழிபுரம் பகுதியில் நிலத்துக்கீழ் பங்கர் வெட்டப்பட்டு கசிப்பு உற்பத்தி செய்து வந்த ஒருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். காட்டுப்புலத்தில் சிறுமி கொல்லப்பட்ட பின்னர், பொலிசார் அந்த பகுதியை குறிவைத்து நடத்திவரும் விசேட வேட்டையிலேயே இந்த கசிப்பு பங்கர் கைப்பற்றப்பட்டது.

அந்த பகுதியில் கசிப்பு உற்பத்தி நடப்பதாக மக்களால் நீண்டகாலமாக பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டு வந்தது. ஆனால் பொலிசார் அதை கணக்கெடுக்கவில்லை. மாணவியின் கொலைக்கு அளவற்ற போதையும் காரணமாக இருந்தது கண்டறியப்பட்டதன் பின்னர், சுழிபுரத்தில் சட்டவிரோத செயற்பாடுகளை பொலிசார் குறிவைத்துள்ளனர்.

சுழிபுரம் மத்தியில் நேற்றுமாலை நடத்தப்பட்ட தேடுதலில் இந்த கசிப்பு உற்பத்தியிடம் முற்றுகையிடப்பட்டது.

27 லீற்றர் கசிப்பு மீட்கப்பட்டது. கசிப்பை உற்பத்தி வந்தவர் என சந்தேகிக்கப்படும் 42 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார்.

நிலத்திலிருந்து 4 அடி கீழ் பங்கர் அமைக்கப்பட்டு கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here