இந்தவார ராசிபலன் (5.1.2020- 11.1.2020)

புதன், ராகு, குரு பகவான் நற்பலன் தருவர். தாமதமான பணியில் முன்னேற்றம் ஏற்படும். நிதானித்து பேசுவது நல்லது.

வாகன பராமரிப்பால் பயணம் எளிதாக அமையும். பிள்ளைகளின் எண்ணத்திற்கு முக்கியத்துவம் தருவீர்கள். ஒவ்வாத உணவினை உண்ண வேண்டாம். மனைவியிடம் விவாதம் வேண்டாம். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற புதிய வாய்ப்பு வரும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்றவும். பெண்கள் உறவினர் வகை குடும்பத்திற்கு உதவுவர். மாணவர்கள் கவனமுடன் படித்து அதிக மதிப்பெண் பெறுவர்.

பரிகாரம் ஆஞ்சநேயர் வழிபாடு நன்மை தரும்.

சுக்கிரன், சந்திரனால் ஓரளவு நன்மை கிடைக்கும். வாழ்வில் புதிய மாற்றம் உருவாகும். உடன் பிறந்தவர்கள் உதவி செய்வர்.

வாகனப்பயன்பாடு அளவுடன் இருக்கும். பிள்ளைகள் சில விஷயங்களில் பிடிவாத குணத்துடன் செயல்படுவர். இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவீர்கள். வழக்குகளில் அனுகூலம் ஏற்படும். மனைவி அன்பு, பாசத்துடன் உதவுவார். வெளியூர் பயணம் ஓரளவு நன்மையை தரும். தொழில், வியாபார வளர்ச்சிக்கு சில மாற்றம் தேவைப்படும். பணியாளர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். கணவரின் அன்பு, பாசத்தில் பெண்கள் மகிழ்வர். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் வேண்டும்.

பரிகாரம் நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.

செவ்வாய், குரு, சுக்கிரன், புதன் அளப்பரிய நற்பலன் வழங்குவர். தாமதமான செயல்கள் புதிய முயற்சியால் நிறைவேறும்.

உடன்பிறந்தவருடன் குடும்ப விவகாரத்தை பேச வேண்டாம். வெளியூர் பயணம் இனிய அனுபவம் தரும். பிள்ளைகளின் ஆரோக்கியம் மேம்பட சத்தான உணவு தேவைப்படும். குடும்பத்தின் தேவை பூர்த்தியாகும். மனைவி வழி சார்ந்த உறவினர் உங்களின் நல்ல குணத்தை பாராட்டுவர். வீட்டில் ஒற்றுமை, மகிழ்ச்சி கூடும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் குறித்த காலத்தில் பணி இலக்கை நிறைவேற்றுவர். உறவினர் குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சி நடத்த பெண்கள் உதவுவர். மாணவர்கள் படிப்பு, கலைகள் பயில்வர்.

பரிகாரம் சனீஸ்வரர் வழிபாடு வெற்றி தரும்.

சூரியன், கேது, சனீஸ்வரர், சந்திரன் அனுகூல அமர்வில் உள்ளனர். உத்வேகமுடன் பணிபுரிவீர்கள்.

சமூக நிகழ்வு மனதில் சில மாற்றம் உருவாக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்கு தேவையானதைச் செய்வீர்கள். சத்தான உணவு, சீரான ஓய்வு ஆரோக்கியத்தை பாதுகாக்கும். மனைவி மூலம் நல்ல ஆலோசனை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அதிக மூலதனம் செய்வீர்கள். பணியாளர்கள், பணியிடத்தில் விவாதம் பேச வேண்டாம். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவர். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் அதிகரிக்கும்.

பரிகாரம் பைரவர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

குரு, புதன், ராகு, சந்திரனால் அதிர்ஷ்டகரமான பலன் உண்டாகும். பேச்சில் நேர்மை நிறைந்திருக்கும்.

பழகுபவர்களிடம் கூடுதல் மதிப்பு, மரியாதை கிடைக்கும். வாகனப்பயணம் பயன் அறிந்து மேற்கொள்வீர்கள். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித்தருவீர்கள். பூர்வ, புண்ணிய பலன் குடும்பத்தில் நன்மையை உருவாக்கும். மனைவியின் உடல் நலத்திற்கு சிகிச்சை தேவைப்படும். கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். தொழில், வியாபாரத்தில் புதியவர்களின் ஆதரவு கிடைக்கும். பணியாளர்கள் குறிப்பிட்ட காலத்தில் இலக்கை நிறைவேற்றுவர். பெண்களுக்கு தாய் வீட்டு உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அதிக கவனம் தேவை.

பரிகாரம் விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.

செவ்வாய், சுக்கிரன், சந்திரனால் நன்மை உண்டு. குறை சொல்பவரிடம் விலகுவது நல்லது. கூடுதல் முயற்சியால் செயல்களில் முன்னேற்றம் ஏற்படும்.

உடன் பிறந்தவரின் உதவி கிடைக்கும். வீடு, வாகனத்தில் உரிய பாதுகாப்பை பின்பற்றவும். பிள்ளைகளின் தேவையை நிறைவேற்றுவீர்கள். ஒவ்வாத உணவினை தவிர்க்கவும். மனைவியின் கருத்துக்கு முக்கியத்துவம் தருவீர்கள். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலத்தை பாதுகாப்பது வளர்ச்சிக்கு உதவும். பணியாளர்கள் கூடுதல் உழைப்பால் பணி இலக்கை நிறைவேற்றுவர். பெண்கள் செலவில் சிக்கனத்தை பின்பற்றுவர். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் பெறுவர்.

சந்திராஷ்டமம்: 5.1.20 காலை 6:00 மணி – 6.1.20 இரவு 7:40 மணி
பரிகாரம்: பெருமாள் வழிபாடு செல்வ வளம் தரும்.

பெரும்பான்மை கிரகங்கள் அளப்பரிய நற்பலன் தருவர். நடைமுறை வாழ்வில் இருந்த சிரமம் குறையும்.

உங்களை அவமதித்தவர் வெட்கி தலைகுனிவர். வாகனப்பயணம் எளிதாகும். பிள்ளைகளின் அறிவுப்பூர்வ செயலால் மகிழ்வீர்கள். குடும்பத்தில் மங்கல நிகழ்வு ஏற்படும். உறவினர்களின் உதவி கிடைக்கும். மனைவியின் செயல்கள் சிறப்பாக நிறைவேற உதவுவீர்கள். தொழில், வியாபாரத்தில் தாராள பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் நிர்வாகத்திடம் நற்பெயரும், சலுகையும் பெறுவர். பெண்கள் நகை, புத்தாடை வாங்குவர். மாணவர்களுக்கு படிப்பில் உள்ள சந்தேகம் தெளிவடையும்.

சந்திராஷ்டமம் 6.1.20 இரவு 7:41 மணி – 8.1.20 நள்ளிரவு 3:33 மணி
பரிகாரம் துர்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.

சுக்கிரன், குரு, சந்திரன் ஓரளவு நற்பலன் வழங்குவர். மனதில் சாந்த குணம் நிறைந்திருக்கும். உங்களின் அறிவுரை நண்பரின் மனதில் மாற்றம் தரும்.

வாகனத்தில் பராமரிப்பு தேவைப்படும். புத்திரரின் செயல் குறையை சரிசெய்வீர்கள். கடனில் ஒரு பகுதி செலுத்துவீர்கள். மனைவி உங்களின் நல்ல குணத்தை பாராட்டுவார். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிக உழைப்பால் சீராகும். பணியாளர்கள் கூடுதல் தொழில் நுட்பம் அறிந்து கொள்வர். பெண்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வீர்கள். மாணவர்கள் பெற்றோர், ஆசிரியரிடம் நன்மதிப்பு பெற முயல்வர்.

சந்திராஷ்டமம் 8.1.20 நள்ளிரவு 3:34 மணி – 11.1.20 காலை 9:03 மணி
பரிகாரம் கிருஷ்ணர் வழிபாடு செல்வ வளம் தரும்.

சுக்கிரன், சந்திரனால் நற்பலன் கிடைக்கும். நல்ல செயல்களால் சமூகத்தில் அந்தஸ்து கூடும். வெகுநாள் எதிர்பார்த்த நன்மை வந்து சேரும்.

வீடு, வாகன பாதுகாப்பில் கவனம் வேண்டும். பிள்ளைகள் சொல் கேட்டு நடப்பர். பூர்வ சொத்தில் வளர்ச்சியும், வருமானமும் கூடும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரம் செழித்து பணம் சேமிப்பாகும். பணியாளர்கள் குறித்த காலத்தில் பணி இலக்கை நிறைவேற்றுவர். பெண்கள் தாய் வீட்டுக்கு உதவுவர். மாணவர்கள் சாகச விளையாட்டுகளில் ஈடுபடக்கூடாது.

சந்திராஷ்டமம் 11.1.20 காலை 9:04 மணி – நாள் முழுவதும்.
பரிகாரம் முருகன் வழிபாடு நம்பிக்கை வளர்க்கும்.

செவ்வாய், இராகு, சுக்கிரன் நல்ல பலன்களை தருவர். சாதனை நிழ்த்தும் எண்ணத்துடன் பணிபுரிவீர்கள்.

அனுகூல சூழல் அமையும். சகோதரர் கேட்ட உதவியை வழங்குவீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்க யோகம் உண்டு. பிள்ளைகளின் செயல்களில் மாறுபட்ட தன்மை இருக்கும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். நண்பரிடம் கடனாக கொடுத்த பணம் வசூலாகும். மனைவி வழி உறவினர்கள் கூடுதல் அன்பு, பாசம் கொள்வர். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். சுற்றுலா பயணம் இனிய அனுபவம் தரும். பணியாளர்கள் நிலுவை பணிகளை நிறைவேற்றுவர். பெண்களுக்கு கணவரின் அன்பு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர்.

பரிகாரம் காளி வழிபாடு இடர் நீக்கும்.

பெரும்பான்மை கிரகங்கள் அதிர்ஷ்ட பலன் வழங்குவர். சமூகத்தில் நன்மதிப்பு அதிகரிக்கும். எதிர்பார்ப்பு திட்டமிட்டபடி நிறைவேறும்.

தம்பி, தங்கையின் அன்பு நெகிழ்ச்சி தரும். புத்திரர் உற்சாகத்துடன் செயல்படுவர். கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். மனைவியின் சொல்லும், செயலும் சிறப்பாக அமையும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளை இனிதாக நடத்துவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி செய்வீர்கள். பணியாளர்கள் சலுகை பெறுவர். பெண்கள் கணவரின் அன்பில் சந்தோஷமாக வாழ்வா். மாணவர்கள் ஆசிரியரின் கவனம் பெற்று படிப்பில் முன்னேறுவர்.
பரிகாரம்: ஆஞ்சநேயர் வழிபாடு வெற்றி தரும்.

சூரியன், புதன், சுக்கிரன், சந்திரன் கூடுதல் பலன்களை வழங்குவர். பணிகளை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள்.

உறவினர் வருகை மகிழ்ச்சி தரும். புத்திரர் புதிய விஷயங்களை அறிந்து கொள்வர். நோய் தொந்தரவு குறையும். மனைவியின் சொல்லும், செயலும் குடும்ப நலன் பேணுவதாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி சிறப்பாக நிறைவேறும். பணியாளர்கள் நிர்வாகத்திடம் நற்பெயரும், சலுகையும் பெறுவர். பெண்களுக்கு தாய் வீட்டு உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஞாபகத்திறன் மேம்படும்.

பரிகாரம் குரு வழிபாடு சுப வாழ்வு தரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here