பள்ளி செல்லாத மாணவி: அடித்து வைத்தியசாலைக்கு அனுப்பிய ஆசிரியை!

0

பாடசாலைக்கு சமூகமளிக்காத மாணவியை ஆசிரியையொருவர் கடுமையாக தாக்கியதில், மாணவி பாதிக்கப்பட்டு கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியிலுள்ள பாடசாலையொன்றிலேயே இந்த சம்பவம் நடந்தது. வியாழக்கிழமை பாடசாலைக்கு செல்லாத மாணவியை, வெள்ளிக்கிழமை ஆசிரியை கடுமையாக தாக்கியுள்ளார். சிறுமியின் உடலில் கடுமையான தழும்புகள் காணப்பட்டன. இதையடுத்து மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர்.

மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி பொதுவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here