சிறுமியுடன் சில்மிசம்: முல்லைத்தீவு தாத்தா கைது!

0

முல்லைத்தீவு சிலாவத்தையில் சிறுமியுடன் சில்மிசம் புரிந்த வயோதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எட்டு வயது சிறுமியுடன் சில்மிசம் புரிந்த எழுபத்து மூன்று வயதானவரே கைதாகியுள்ளார்.

தியோநகர் பகுதியில் தனது உறவினருடன் வாழ்ந்து வந்த இந்த சிறுமியை அந்த முதியவர் தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. சிறுமியின் உறவினர்களால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் கொடுக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து கடந்த வியாழக்கிழமை முதியவர் கைதானார். சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வயோதிபர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here