பெண்கள் திருமணத்திற்கு தயங்குவது பாலியல் அறியாமையாலேயே: டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள் 21

ஷெரின் (27)
அம்பேபுஸ்ஸ

எனக்கு திருமணமாகி 3 வருடங்கள். இன்னும் குழந்தையில்லை. சில மருத்துவ குறிப்புக்களை படித்தபோது, பெண்கள் புகைபிடித்தாலும் குழந்தை இன்மை ஏற்படுமென்று அறிந்தேன். திருமணத்தின் முன்னர் வரை அவ்வப்போது புகைபிடிக்கும் பழக்கமிருந்தது. ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணியாற்றியபோது, நண்பிகள் சிலர் ஒன்றாக இருந்தபோது, புகைப்பழக்கம் ஏற்பட்டது. இரண்டு வருடமளவில் இருந்தது. பின்னர் அந்த பழக்கத்தை கைவிட்டு விட்டேன். அதுதான் தற்போது பாதிப்பை ஏற்படுத்தியிருக்குமா?

டாக்டர் ஞானப்பழம்: இந்த பகுதியில் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். அனேக பிரச்சனைகளிற்கு கற்பனைப்பயமும், ஊகமுமே காரணமென. நீங்கள் பல விடயங்களையும் யோசித்து குழப்பிக் கொள்கிறீர்கள்.

முதலில், புகைபிடிப்பது உடல் நலத்துக்குக் கேடு என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், புகைபிடிப்பது தாம்பத்யத்தைப் பாதிக்கும் என்பது பலர் அறியாதது. இன்று பெண்களையும் புகைபிடிக்கும் பழக்கம் தொற்றிக்கொண்டிருக்கிறது. அது மேலும் விபரீதமானது.

அமெரிக்காவில் உள்ள வேக் ஃபாரஸ்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் ஜம்ப்ளிங் ஃப்ராங்ளிங், தான் மேற்கொண்ட ஓர் ஆராய்ச்சியின் முடிவில் புகைபிடிப்பதால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும் என்று பட்டியலிட்டிருக்கிறார். புகைபிடிக்கும்போது 60 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சிகரெட் எரிந்து, 400 வகையான விஷம் நிறைந்த இரசாயனங்கள் வெளியாகும். அவற்றில் நிகோடின், கார்பன் மோனாக்சைட் போன்றவை முக்கியமானவை.

நிகோடின், சிறிய போதையை அளித்து, மீண்டும் மீண்டும் புகைபிடிக்கத் தூண்டும். நாளடைவில் அது பெரும் பிரச்னையை ஏற்படுத்தும். குறிப்பாக, ஆண்களுக்கு விரைப்புத் தன்மை குறையும். அதாவது, மற்றவர்களைவிட புகைபிடிப்பவர்களுக்கு 26 சதவிகிதம் விரைப்புத் தன்மை குறையும் என்று ஆய்வுகள் சொல்கின்றன.

30 முதல் 50 வயதுவரை உள்ளவர்கள் பெரும் பாதிப்பை எதிர்கொள்கிறார்கள். புகைபிடிக்கும்போது இரத்தக்குழாயில் நிகோடின் படியும். காலப்போக்கில் இரத்தக்குழாய் கெட்டியாகி, நெகிழ்வுத் தன்மை குறைந்துவிடும். அதனால் உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. தாம்பத்யத்தின்போது ஆண்களுக்கு ஏற்படும் விரைப்புத் தன்மைக்கு நிறைய இரத்த ஓட்டம் தேவை. அதற்கு இரத்தக்குழாய் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

புகைபிடிப்பதால் ஆண்களைவிட பெண்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். பெண்ணுறுப்பில் இயல்பாகச் சுரக்கும் திரவம் தடைபடும். அதனால் தாம்பத்யத்தின்போது நெகிழ்வுத்தன்மை குறைந்து, பெண்ணுறுப்பு சேதமடைவதுடன் எரிச்சலும் ஏற்படும். மேலும், பெண்ணுறுப்பிலுள்ள ‘கிளிட்டோரிஸ்’ பகுதிக்கு இரத்தம் செல்வது தடைபட்டு, உறவில் முழுமை கிடைக்காது. இது போன்ற நிலை தொடர்ந்தால், தம்பதிகளிடையே மனக்கசப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

புகைபிடிப்பதால் தாம்பத்யக் குறைபாடு ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டால், ‘நிகோடின் ரீப்ளேஸ்மென்ட் தெரபி’ (Nicotine Replacement Therapy) என்ற சிகிச்சையளிக்க வேண்டும். விரைவில் பலன் கிடைக்கும் அல்லது போதை மறுவாழ்வு மையத்துக்குச் சென்று (Alcoholic Anonymous Centre) உளவியல் நிபுணரைச் சந்தித்து ஆலோசனை பெறலாம். இதன் மூலம் மேற்கொண்டு இரத்தக்குழாயில் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

நீங்கள் இப்போது செய்ய வேண்டியது, ஒரு மகப்பேற்று வைத்தியரை நாடி, நீங்களா அல்லது உங்கள் துணையா மகப்பேறின்மைக்கு காரணமென்பதை தெரிந்து, அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டியதே.

பெண்- பெயர் குறிப்பிடவில்லை (21)
மானிப்பாய்

உடலுறவின்போது என் கணவர் கிளிடோரியஸ் பகுதியை தேய்த்துக் கொடுக்கிறார். அப்படித் தேய்க்கும்போது கிளிடோரியஸ் பகுதி மறைந்து விடுவதாகச் சொல்கிறார். அது உண்மையா? அதனால் ஏதாவது பிரச்சனை வருமா?

டாக்டர் ஞானப்பழம்: பெண் சாதாரண நிலையில் இருக்கும்போது கிளிடோரியஸை நன்றாகப் பார்க்க முடியும். ஆனால், பெண் அதிகமாகத் தூண்டப்படும்போது, கிளிடோரியஸ் பகுதி உள்ளே மறைந்துவிடுகிறது. அப்படி மறைந்துவிடும் நிலையிலும் கிளிடோரியஸ் பகுதி சென்சிட்வாக இருக்கும். மறைந்து விடுகிறது, பார்வைக்குத் தெரியவில்லை என்பதற்காக உங்கள் கணவர் கவலைப்பட வேண்டாம். முதலில் கிளிடோரியஸ் தென்பட்ட சதைப் பகுதியைத் தேய்த்துக் கொடுத்தாலே, தொடர்ச்சியாகத் தூண்டல் ஏற்படும்.

இலங்கையில் கல்வியறிவு வீதம் அதிகமாக இருந்தாலும், ஒப்பீட்டளவில் பெண்கள் பாலுறுப்புக்கள் பற்றிய அறிவை தாமதமாகவே பெறுகிறார்கள். இதனால்தான் பல பகுதிகளிலும் சிறுமிகள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

உங்கள் சந்தேகத்துடன், மேலும் சில விசயங்களை சொல்லி விடுகிறேன்.

அண்மையில் ஒரு பெண் உளவியலாளர் தனது அனுபவத்தை சொன்னார், திருமணத்திற்கு பயந்து அடிக்கடி பெண்கள் தன்னிடம் ஆலோசனைக்கு வருவதாக. அப்படி பயப்பிடுபவர்கள் அனைவருக்கும் இருந்த பிரச்சனை, பாலுறுப்புக்கள் பற்றிய தெளிவின்மையே.

அவரது அனுபவத்தில், அண்மையில் ஒரு பெண் திருமணத்தை மறுத்தமைக்கு காரணம், கன்னி சவ்வு கிழிபடாமல் இருக்கிறதா என்ற அச்சமே. எனக்கு கல்யாணம் வேண்டாம் என்று வீட்டில் சொல்ல,நாணத்தால்தான் அப்படிச் சொல்வதாக எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், அது நாணம் அல்ல; அச்சம்.

சிறுநீர் கழிக்கும் உறுப்புதான், உடல் உறவுக்கான உறுப்பா?

உலகில் பல பெண்களுக்கும் இந்த சந்தேகம் ஒரு காலகட்டத்தில் ஏற்பட்டு மறையும். இதுபோன்ற விஷயங்களைப் பெரியவர்களும், பிள்ளைகளிடம் பகிர்ந்து கொள்வதற்குத் தயங்குகிறார்கள். பிள்ளைகளோ, பெரியவர்களிடம் கேட்பதற்குப் பயப்படுகிறார்கள். செக்ஸ் என்பதே தயக்கமும் அச்சமும் நிறைந்ததாக மாறிவிடுகிறது. அதனால்தான் பல பெண்கள் உறுப்பு முழுதையுமே சிறுநீர் கழிக்கும் உறுப்பு எனத் தவறாக நினைக்கிறாள்.

பெண் உறுப்பை உட்புறம், வெளிப்புறம் என இரண்டாகப் பிரிக்கலாம்.

பெண்குறியின் உட்புறம் 1. ஓவரிஸ் (கருப்பை), 2. ஃபெலோப்பியன் ட்யூப், 3. கர்ப்பப்பை (யூட்ரஸ்), 4. யோனி (வெஜைனா) என நான்கு முக்கியப் பகுதிகளைக்கொண்டது. பெண்களின் உட்புற செக்ஸ் உறுப்புகள் மூன்று முக்கிய வழிகளில் செயல்படுகின்றன.

முதலில், உற்பத்திப் பிரிவுகள். ஓவரிஸ், கரு முட்டை உருவாகும் இடம். கருத்தரித்த முட்டை பாதுகாப்பாக வளரும் இடம், கர்ப்பப்பை. அங்குதான் கருத்தரித்த முட்டை தங்கி, குழந்தையாக வளர்கிறது, தவிர, மூன்று குழாய்கள் உள்ளன. இரண்டு ஃபெலோப்பியன் குழாய்கள், மற்றும் (யோனி) வெஜைனா.

இந்தப் யோனியைக் கன்னிச் சவ்வு மூடியிருக்கும். முதல் முறை உடலுறவு கொள்ளும்போது இந்தச் சவ்வு கிழிபடும். அப்போது சிறிய அளவில் இரத்தம் வெளியாகும். ஆனால், இந்தக் காலத்தில் பெண்கள் சைக்கிள் ஓட்டுவது, தாண்டிக் குதிப்பது, விளையாடுவது போன்ற செயல்களால் திருமணத்துக்கு முன்பேகூட கன்னிச்சவ்வு கிழிந்துவிடுவது உண்டு.

உடலுறவு கொள்வது யோனி வழியாகத்தான். படித்த பலருக்கே இந்த விவரம் தெரிவது இல்லை. என்னிடம் வந்த ஒரு படித்த, புதுத் தம்பதியினர் உடலுறவின்போது வலி ஏற்படுவதாகச் சொன்னார்கள். அவர்களிடம் பேசிய பிறகுதான், அந்தப் பெண்ணின் சிறுநீர் கழிக்கும் துளையின் வழியே உடலுறவுக்கு முயற்சி செய்தது தெரியவந்தது.

இனப்பெருக்க உறுப்புகளைப் பற்றிய போதிய தெளிவு இல்லாமையே இதற்குக் காரணம். குழந்தையை ஈன்றெடுப்பதும் அந்தப் பெண்குறி வழியாகத்தான். வயிற்றைக் கீறி எல்லாம் குழந்தையை வெளியே எடுப்பது இல்லை.

பெண் உறுப்பு என்று பொதுவாக எதைச் சொல்கிறோம்?

பெண்குறி என்பது பெண்களின் செக்ஸ் உறுப்பு ஆகும். அதன் வெளிப்புறப் பகுதியின் முழுத் தொகுதியை வால்வா என்கிறோம். அதன் பெரும்பகுதி முடியால் மூடப்பட்டு இருக்கிறது. அது இரண்டு தொடைப் பகுதிகளும் இணையும் மையப் பகுதியில் உள்ளது. பெண்களுக்கு யோனியின் திறப்புப் பகுதி (படம்) ஒரு சவ்வினால் ஓர் அளவுக்கு மூடப்பட்டு இருக்கும். அதன் மேலே சிறுநீர் வெளியேறும் துளை உள்ளது.

பெண் குறிக்குள் பார்த்தோலின் சுரப்பிகள் மூலம் பிசுபிசுப்பான திரவம் சுரக்கப்படுகிறது. இந்தத் திரவம் பெண்குறியின் உள் உதடுகளான லேபியா மைனோராவை உழைவுத்தன்மையோடு வைத்திருக்கிறது. சிறுநீர் குழாய்க்கு மேலே அதை மூடியபடி கிளிடோரியஸ் இதழ் அமைந்துள்ளது. ஆணுறுப்புக்கு நிகராக இதைச் சொல்லலாம். வெளி உதடுகள் லேபியா மஜோரா எனப்படும். இது மோன்ஸ் வெனரிஸ் பகுதியில் இருந்து வெளிப்படுகிறது.

வால்வா எனப்படும் இந்த ஒட்டுமொத்த பெண் உறுப்புத் தொகுதியும் ஒரு பொது எலும்பு (பப்ளிக் போன்) வளையத்தின் உட் சுவருக்குள் சதைப் பகுதியால் சுற்றப்பட்டு அமைந்துள்ளது.’

கடந்த பாகத்தை படிக்க: விதைப்பை ஏற்ற இறக்கமாக இருப்பது கொடை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here