விலக தயார்: சு.க அமைச்சர்கள் கடிதம்!

0

கூட்டாட்சியில் குழப்பங்கள் ஏற்படாமல் இருப்பதற்காக பதவியிலிருந்து விலகிக்கொள்ள தயாராக இருப்பதாக, நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்த சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர். இன்று கடிதம் மூலம் இந்த தகவலை தெரியப்படுத்தியுள்ளனர். பிரதமர் மீது நம்பிக்கையில்லாத காரணத்தினாலேயே, கூட்டு எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்ததாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

நம்பிக்கையில்லா பிரேரணையில் வெற்றிபெற்றதையடுத்து, நேற்று முன்தினம் ஜனாதிபதியை சந்தித்த பிரதமர் தலைமையிலான ஐ.தே.க குழு, நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்த அமைச்சர்களை பதவிவிலக வேண்டுமென கோரியிருந்தனர். இதையடுத்து ஜனாதிபதிக்கும் அவர்களிற்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது.

இந்த பின்னணியிலேயே சு.க அமைச்சர்கள் இன்று இந்த கடிதத்தை அனுப்பியுள்ளனர்.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் குறித்த நபர்களுக்கு எதிராகக் கையளித்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை வாபஸ் பெறுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here