தேசத்தின் குரலுக்கு அஞ்சலி!

தேசத்தின் குரல் என விடுதலைப் புலிகளால் மதிப்பளிக்கப்பட்ட, அந்த அமைப்பின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் 13வது ஆண்டு நினைவுநாள் இன்றாகும். அவரது நினைவு நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சிக் கிளையின் ஏற்பாட்டில், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள் த.குரகுலராஜா, சு.பசுபதிப்பிள்ளை, உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பொது சுடரினை மூன்று மாவீரர்களின் தந்தை ஏற்றி வைத்தார். தொடர்ந்து திரு உருவப் படத்திற்கான மலர் மாலையினை பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் குருகுல ராஜா ஆகியோர் அணிவித்தனர்.

மலர் வணக்கம் இடம்பெற்றதுடன், அஞ்சலி உரைகளும் இடம்பெற்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here