Where is Sri Lanka?: 2019 இல் கூகிளில் அதிகம் தேடப்பட்ட நாடு!

2019ம் ஆண்டில் கூகிள் தேடுபொறியில் உலகளாவிய ரீதியில் இலங்கையின் அமைவிடத்தை மிக அதிகமானவர்கள் தேடியுள்ளனர். உலகில் அதிகம் தேடப்பட்ட சொற்களில் “இலங்கை“ என்ற சொல் 7வது இடத்தில் உள்ளது.

இலங்கை என்ற சொல் தவிர, bombs in Sri Lanka, bomb blasts in Sri Lanka என்ற சொற்களும் அதிகமாக தேடப்பட்டுள்ளன.

அத்துடன், தேடப்படும் விடயங்களை விடயதானத்தின் அடிப்படையில் வகுத்த பட்டியலில், Where is…? என்ற பகுதியில், உலகளவில் இலங்கையின் அமைவிடத்தை தேடியவர்களே மிக அதிகமானவர்கள்.

கடந்த ஏப்ரல் மாதம் இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து, கூகிளில் இலங்கையை தேடியவர்களின் எண்ணிக்கை வியத்தகு முறையில் அதிகரித்ததாக அந்த இணையம் குறிப்பிடுகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here