தமிழர்களை கடத்தி முதலைக்கு போட்ட தகவலை வெளியிட்ட இருவரும் கைது!

தமிழர்களை வெள்ளை வாகனத்தில் கடத்தி முதலைக்கு இரையாக்கிய அதிர்ச்சி தகவலை வெளியிட்ட இருவரையும் குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னதாக, ஐ.தே.மு நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த இருவர் இந்த அதிர்ச்ச்சி தகவலை வெளியிட்டிருந்தனர்.

வெள்ளை வாகன சாரதியொருவரும், வெள்ளை வாகனத்தில் கடத்தப்பட்ட ஒருவமே பகிரங்கமாக விடயங்களை கூறியிருந்தனர். அவர்கள் உணவகம் ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here