வவுனியாவில் புகையிரதம் மோதி யானை பலி

வவுனியா செட்டிகுளம் பீடியா பண்ணைப்பகுதியில் புகையிரதத்துடன் மோதுண்டு யானையொன்று பலியாகியுள்ளது.

இன்று (13) அதிகாலை 2.30 மணியளவில் மன்னார் நோக்கி சென்ற புகையிரத்துடனேயே தண்டவாளத்தில் நின்ற யானை மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்கு வருகை தந்த வனஜீவராசிகள் திணைக்களத்தினர் யானையினை பார்வையிட்டதுடன் யானை 20 வயதுடையது எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் செட்டிகுளம் பகுதியில் புகையிரத்துடன் மோதுண்டு யானை பலியாகும் சம்பவங்கள் அதிகமாக இடம்பெற்று வரும் நிலையில் செட்டிகுளம் பெரியகட்டு பகுதியில் அமைக்கப்பட்ட யானைகள் தண்டவாளத்தில் வரும்போது சமிக்ஞை காட்டும் இயந்திரம் செயலிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here