சிறிகாந்தா தலைமையில் உருவாகும் புதிய கட்சியின் பெயர், பதவிகள் இறுதி செய்யப்பட்டன!

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தில் (ரெலோ) இருந்து அண்மையில் பிரிந்த, அந்தக்கட்சியின் செயலாளர் என்.சிறிகாந்தா, தவிசாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தரப்பு எதிர்வரும் 15ம் திகதி தனிக்கட்சி அறிவிப்பை விடுக்க திட்டமிட்டுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் ஏற்பட்ட குழப்பத்தை தொடர்ந்து, ரெலோவிலிருந்து அதன் செயலாளர் என்.சிறிகாந்தாவின் தலைமையில் யாழ் மாவட்ட கிளையின் ஒரு பகுதியினர் வெளியேறியிருந்தனர்.

ரெலோவின் அனுமதியில்லாமல் ஜனாதிபதி தேர்தலில் குதித்த எம்.கே.சிவாஜிலிங்கமும் இந்த கட்சியில் இணைகிறார்.

புதிய கட்சிக்கு இலங்கை தமிழ் தேசிய கட்சி என பெயரிட தீர்மானிக்கப்பட்டுள்ளதை தமிழ்பக்கம் அறிந்தது.

கட்சியின் தலைவராக என்.சிறிகாந்தா செயற்படுவார். செயலாளராக எம்.கே.சிவாஜிலிங்கமும், தேசிய அமைப்பாளராக சபா.குகதாசும் செயற்படுவார்கள்.

கட்சியின் கொடியில் கறுப்பு, மஞ்சள், பச்சை வர்ணங்கள் இருக்கும். கறுப்பு வர்ணம் தமிழர்களை குறிக்கும்.

கார்த்திகைப் பூ, செண்பகம் ஆகியவற்றை கொண்ட சின்னம் வடிவமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருவதை தமிழ்பக்கம் அறிந்தது.

எதிர்வரும் 15ம் திகதி கட்சி தொடர்பான அறிவிப்பை விடுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடாளுமன்ற தேர்தலில் விக்னேஸ்வரன் அணியில் இணைந்து போட்டியிட இவர்கள் தீர்மானித்துள்ளனர். அதேவேளை, அந்த கூட்டணிப் பேச்சில் முக்கிய நிபந்தனையாக, கூட்டணிக்கு ஒரு நாடாளுமன்ற ஆசனம் கிடைத்தால், அதை கூட்டணியிலுள்ள கட்சிகளிற்கிடையில் ஒவ்வொரு வருடமும் பகிர வேண்டுமென வலியுறுத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


தமிழ்பக்கத்தின் செய்திகளை தமிழ்வின், ஜேவிபி உள்ளிட்ட லங்காசிறி குழும ஊடகங்கள் மீள்பதிவு செய்வது குறிப்பிடத்தக்கது. செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ்பக்கத்துடன் இணைந்திருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here