கள்ளக்காதலில் உருவான சிசுவை கொன்று புதைத்த தாய்: ஒரு மாதத்தின் பின் இன்று தோண்டியெடுக்கப்பட்டது!

திருகோணமலையில் கள்ளக்காதலால் உருவாக சிசுவை தாயாரே கொன்று புதைக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிசு புதைக்கப்பட்ட ஒரு மாதத்திற்கு பின்னர் இன்று (12) தோண்டி எடுக்கப்பட்டது.

உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விளாங்குளம் பகுதியில் கடந்த நவம்பர் மாதம் 9ம் திகதி குறைமாதத்தில் பெற்ற சிசுவை புதைத்துள்ளதாக கிராம உத்தியோகத்தரின் ஊடாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று திருகோணமலை நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம்.ஹம்சா, திருகோணமலை பொது வைத்தியசாலை சட்ட வைத்திய நிபுணர் றுச்சிர நதீர மற்றும் பொலிஸார் முன்னிலையில் சிசுவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.

திருமணமாகி மூன்று பிள்ளைகளைப் பெற்றெடுத்த நிலையில் கணவரை பிரிந்து தனிமையாக வாழ்ந்து வந்த பெண்ணொருவரே குழந்தையை பெற்றெடுத்துள்ளார். கள்ளக்காதலனின் மூலம் உருவாக கருவை குறை மாதத்திலேயே ஊசி மூலமாக வெளியேற்றியதாக அந்த பெண் வாக்மூலமளித்தள்ளார்.

சிசுவின் தாயாரை சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here