வல்வெட்டித்துறையில் 9 வயது சிறுமியை சீரழித்த குற்றச்சாட்டில் 72 வயது பூசகரின் விளக்கமறியல் நீடிப்பு!

வல்வெட்டித்துறையில் ஒன்பது வயதுச் சிறுமி யை சீரழித்ததாக குறிப்பிடப்படும் பூசகர் மற்றும் சிறுமியின் சித்தப்பாவின் விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டுள்ளது பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம்.

எதிர்வரும் 20ம் திகதி வரை இருவரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன், 20ம் திகதி மீள வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்போது, சிறுமியின் வாக்குமூலம் மற்றும் மருத்துவ பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டது.

தந்தையை இழந்த 9 வயதான சிறுமியொருவர் பாடசாலையில் கையடக்கத் தொலைபேசி வைத்திருந்ததை, கடந்த 27ம் திகதி பாடசாலை ஆசிரியர் அவதானித்திருந்தார். இதையடுத்து, சிறுமியிடம் விசாரணை நடத்தியபோது, வல்வெட்டித்துறை அம்மன் ஆலய பூசகர் தொலைபேசியை தந்ததாகவும், தொலைபேசி மூலம் பிரசாதம் தர ஆலயம் வருமாறு அழைத்ததாகவும் சிறுமி கூறியுள்ளார்.

இதையடுத்து பருத்தித்துறை பிரதேச செயலக சிறுவர் நன்னடத்தை பிரிவு உத்தியோகத்தரிடம் தகவல் வழங்கப்பட்டு, பொலிசாரிடம் முறையிடப்பட்டது.

இதையடுத்து 72 வயதான ஆலய அர்ச்சகர், சிறுமியின் சிததப்பாவான 50 வயதானவர் கைதானார்கள்.

விசாரணையில் சிறுமி, பூசகர் தன்னை ஆலயத்தில் வைத்து துன்புறுத்தியதாகவும் அதிகளவு பணத்தையும் தந்ததாகவும் குறிப்பிட்டார். அர்ச்சகர் தந்ததாக ஒரு தொகை பணத்தையும் வழங்கினார்.

மேலும் சித்தப்பா ஒருவரும் தன்னைத் துன்புறுத்துவதாகவும் சிறுமி விசாரணையில் தெரிவித்தார்.

சிறுமியின் சிம் அட்டையும் பூசகரின் பெயரிலேயே காணப்படுகின்றது.

அவர்கள் இருவரும் பருத்துறை நீதவான் நீதிமன்றத்தில் கடந்த 30ம் திகதி முன்னிலைப்படுத்தப்பட்டனர்.வழக்கை விசாரித்த நீதீமன்று சந்தேக நபர் இருவரையும் இன்று (12) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டிருந்தது.

இந்தவழக்கு இன்று பருத்துறை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சந்தேக நபர்கள் இருவரும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.

முதலாவது சந்தக நபரான அர்ச்சகர் சார்பில் மூத்தசட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தாவும்,  சிறுமி நலன் சார்பில் சட்டத்தரணி சுகாஸூம் முன்னிலையானார்கள்.

முதலாவது சந்தேக நபர் சார்பில் பிணை விண்ணப்பத்தை சட்டத்தரணி ஸ்ரீகாந்தா சமர்ப்பணம் செய்தார்.

பூசகர் 72 வயது நிரம்பியவர். அவர் வன்புணர்வுக்குட்படுத்தியதாக பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் சிறுமி தெரிவிக்கவில்லை. ஆகவே பூசகர் பிணையில் விடுவிக்கப்படவேண்டும் என்று மன்றுரைத்தார்.

சிறுமி ஆலய பூசகரால் 2 வருட தொடர்ச்சியாக வன்புணர்வுக்கு உட்படுத்த்பட்டுள்ளார். மக்கள் வழிபடும் ஆலய சமூகத்தில் இவ்வாறான சமூகபிரள்வு இடம்பெற்றுள்ளமை பாரதூரமான விடயம் இதனை சமூகத்தில் அனுமதிக்க முடியாது.
சிறுமி பராயமடையாதவர். அவருக்கு பூசகரால் தனக்கு இழைக்கப்பட்ட பாதிப்பை விபரிக்க முடியாது. அதனால் தான் சட்ட மருத்துவ அறிக்கையை கோருகின்றோம். பராயமடையித சிறுவர்களின் காப்பகமாக நீதிமன்றமே உள்ளது. எனவே முதலாவது சந்தேக நபரான பூசகரும் அவருக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் சித்தப்பாவையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க வேண்டும் என்று சட்டத்தரணி சுகாஷ் மன்றுரைத்தார்.

இரு தரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்த நீதவான், சந்தேக நபர்கள் சார்பான பிணை விண்ணப்பத்தை நிராகரித்து அவர்களது விளக்கமறியலை வரும் 20ம் திகதிவரை நீடித்தார்.

அத்துடன் சிறுமியின் சட்ட மருத்துவ அறிக்கையையும் அவரது வாக்குமூலத்தையும் வரும் 20ம் திகதி மன்றில் சமர்ப்பிக்க நீதிமன்றம் பொலீஸாருக்கு உத்தரவிட்டது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here