வவுனியா பதில் பணிப்பாளருக்கு ஆதரவாக ‘செற்றப்’ போராட்டம்!

வவுனியா வைத்தியசாலை பதில் பணிப்பாளர் ஒழுக்காற்று விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டார் என்ற விடயத்தை தமிழ் பக்கம் முதலில் வெளிச்சமிட்டிருந்தது.

2018.4.19 தொடக்கம் 2018.04.26 வரையான காலப்பகுதியில் மலேசியாவிற்கு மனைவியுடன் பயணம் செய்திருந்தார். எனினும், இதற்கான அனுமதியை அவர் பெற்றிருக்கவில்லை. வெளிநாட்டு பயணம் மேற்கொண்ட காலத்தில், கடமையிலிருந்ததைபோல மோசடியாக முறையில் வரவு பதிவேடு தயாரித்துள்ளார். அத்துடன், அந்த காலப்பகுதியில் கூட்டங்கள் நடந்ததை போன்ற போலியான அறிக்கைகள் தயாரிக்கப்பட்டிருந்தன. அத்துடன் வெளிநாடு சென்ற 19ம் திகதி, திரும்பிய 26ம் திகதி ஆகிய தினங்களில் மேலதிக நேரக் கொடுப்பனவு பதிவு செய்யப்பட்டு, கொடுப்பனவு பெறப்பட்டுள்ளது.

விசாரணையில் இவை அனைத்தும் நிரூபிக்கப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை மத்திய சுகாதார அமைச்சிற்கும், வடக்கு ஆளுனருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவருக்கான இடமாற்றம் வழங்கப்பட ஆயத்தம் நடந்து வருகிறது என்ற செய்தியையும் தமிழ்பக்கம் வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், வைத்தியசாலை பதில் பணிப்பாளரின் இடமாற்றத்தை இரத்து செய்ய கோரி, வைத்தியசாலையில் உள்ள சில சங்கங்கள் ஆர்ப்பாட்ட போராட்டமொன்றை நடத்த தயாராகி வருகிறார்கள். இதற்கான கலந்துரையாடல் கடந்த 21ம் திகதி இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலையில் உள்ள சங்கங்கள் சிலவற்றை, பதில் பணிப்பாளர் தனது கைக்குள் வைத்துள்ளார், அவர்களிற்கு முறையற்ற சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக இருந்து வருகிறது. இந்த சலுகை பெற்றுக்கொள்வதாக குற்றம்சாட்டப்படும் அமைப்புக்களே இந்த முன்னாயத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

தாதியர் சங்கம், பராமரிப்பு சேவை ஊழியர்கள் இதில் முக்கிய அமைப்புக்கள்.

ஒழுக்காற்று விசாரணைக்கு உள்ளாகிய பதில் பணிப்பாளரின் மனைவியே தாதியர் சங்கத்தின் செயலாளராக இருக்கிறார். வைத்தியாலையின் சிற்றுண்டி சாலையும், நலன்புரி கடையும் தாதியர் சங்கத்தின் தலைவர், பொருளாளராலேயே நடத்தப்பட்டு வருகிறது.

பராமரிப்பு சேவையிலிருப்பவர்கள் விரும்பிய நேரத்திற்கு பணிக்கு வருகிறார்கள், சீருடை அணிவதில்லை போன்ற குற்றச்சாட்டுக்கள் உள்ளன. பராமரிப்பு சேவையிலுள்ள ஒருவரே சைக்கிள் பார்க்கிற்கான அனுமதி பெற்று நடத்துகிறார்.

இந்த அமைப்புக்களே பணிப்பாளரின் இடமாற்றத்தை இரத்து செய்ய வலியுறுத்தி களத்தில் இறக்கப்படவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here