வவுனியாவில் ஜந்துக்கு மேற்பட்ட அரச நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்குதல்

வவுனியாவில் 650க்கு மேற்பட்ட பேருக்கு டெங்கு பரவியுள்ள நிலையில் வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (12) காலை தொடக்கம் வவுனியா பொது சுகாதார பரிசோதர்களினால் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னேடுக்கப்பட்டன.

இதன் போது ஜந்துக்கு மேற்பட்ட அரச நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் மேற்கொள்ளப்பட்டது.

வவுனியா நகரப்பகுதியில் டெங்கு நோயின் பரம்பல் அதிகரித்து காணப்படுவதுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் 650க்கு மேற்பட்ட டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் வவுனியா நகர் முழுவதும் பொது சுகாதார பரிசோதகர்கள் டெங்கு நோய் பரவும் வகையில் காணப்படும் இடங்கள் சோதனை செய்யப்படுவதுடன், அவற்றை அழிக்கும் நடவடிக்கையும் இடம்பெற்று வருகிறது.

வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் திடீர் சோதனைக்குட்படுத்திய சமயத்தில் டெங்கு நோய் பரவும் நிலையில் காணப்பட்ட நெல் களஞ்சியசாலை, இலங்கை மின்சார சபை , தொழிற்பயிற்சி அதிகாரசபை , தேசிய வீடமைப்பு அதிகாரசபை , அரச விடுதிகள் , பொதுமக்களின் வீடுகள் போன்றவற்றிக்கு எதிராக வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ் வழக்கானது இம் மாதம் 19ம் திகதி வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here