சுவிஸ் செய்தது தகவல் திருட்டு: கொந்தளிக்கும் தமிழ் பெண்!

ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கை மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்துவதற்காகவே குற்றப்புலனாய்வு பிரிவின் முன்னாள் விசாரணை அதிகாரி நிஷாந்த டி சில்வா சுவிற்சர்லாந்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என எச்சரித்துள்ளார் சுவிற்சர்லாந்திற்கான முன்னாள் இலங்கைத் தூதர் தமரா குணநாயகம்.

நிஷாந்தவிடம் முக்கிய ஆவணங்கள் இருப்பது மேற்கிற்கு தெரியும். இலங்கை மீது ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் உண்மையென குறிப்பிடவே நிஷாந்த சில்வா பயன்படுத்தப்படவுள்ளார், இதனால் இலங்கை அரசு எச்சரிக்கையாக செயற்பட வேண்டுமென அவர் எச்சரித்துள்ளார்.

சுவிற்சர்லாந்து அரசாங்கமே நிஷாந்த சில்வாவை அங்கு வரவழைத்துள்ளது என்றும், இது தகவல் திருட்டு என்றும் அவர் சாடியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here